கவர்ச்சிக்கு டாட்டா காட்டிட்டு பிக்பாஸிற்கு சென்ற கிரண் ரதோட் – அங்கு சகலமும் இருக்கு வாங்க!

Author: Shree
5 September 2023, 7:38 pm

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்க உள்ளனர். அதற்கான வேளைகளில் பிக்பாஸ் குழு மும்முரமாக இறங்கியுள்ளது. இந்த முறை யார் யாரெல்லாம் பங்கேற்க உள்ளார்கள் என்பதை கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம். கடைசியாக முகமது அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.

7வது சீசனுக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனும் மற்ற சீசன்களை போலவே சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் இருக்கவேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சீசனில் பங்கேற்கப்போகும் 18 போட்டியாளர்களின் மொத்த லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதன்படி யார் யாரெல்லாம் பங்கேற்க போகிறார்கள் என்ற முழு லிஸ்டை நாம் ஏற்கனவே பார்த்திருந்தோம்.

இந்த சீசனில் பிரபல கிளாமர் நடிகையான கிரண் ரதோட் கலந்துக்கொள்ளவிருப்பதாக சமீபத்திய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. ஆனால் தற்போது அவர் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டுள்ள வீடியோவை வெளியிட்டு கவர்ச்சிக்கு டாட்டா காட்டியுள்ளார். எனவே இனிமேல் கவர்ச்சியை பிக்பாஸ் வீட்டில் எதிர்பார்க்கலாம்.

  • Nayanthara calls off Lady Super Star லேடி சூப்பர் ஸ்டார் வேண்டாம்.. நயன்தாரா அறிவிப்புக்கு காரணம் என்ன?
  • Close menu