பறி போன 6 உயிர்கள்.. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த துயரம் : ஆம்னி வேனில் பயணம் செய்த போது சோகம்!!
Author: Udayachandran RadhaKrishnan6 September 2023, 8:45 am
பறி போன 6 உயிர்கள்.. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த துயரம் : ஆம்னி பேருந்தில் பயணம் செய்த போது சோகம்!!
சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் சின்ன கவுண்டனூர் பைபாஸ் என்ற இடத்தில் அதிகாலை 8 நபர்களுடன் சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் எதிர்பாராத விதமாக நின்று கொண்டிருந்த ஈச்சர் லாரியில் மோதி விபத்துக்குளானது.
இதில் சம்பவ இடத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இருவர் பலத்த காயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு அனுப்பி வைத்துள்ளனர்.
இதை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேலம் எஸ்.பி அருண் கபிலன், சங்ககிரி டி.எஸ்.பி.ராஜா மற்றும் தாசில்தார் அறிவுடை நம்பி ஆகியோர் விபத்து நடந்த இடத்தில் பார்வையிட்டனர். கோர விபத்து குறித்து சங்ககிரி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.