அந்த மாதிரி இருந்தா சினிமாவில் ஈஸியா ஜெயிச்சிடலாம்.. தப்பு கணக்கு போட்ட சாய் பல்லவி..!

Author: Vignesh
6 September 2023, 12:30 pm

நடன கலைஞராக டிவி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. பின்னர், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக இந்திய திரையுலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து, நிறைய பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. தமிழில் NGK, மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஹீரோயினுக்கு ஏத்த எந்த வரையறையும் இல்லாமல் வித்தவுட் மேக்கப்பில் நேச்சுரலாக வலம் வருவது தான் இவரின் தனி அழகு . இவர் சமீப காலமாக, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார் நடிகை சாய் பல்லவி. அழகான தோற்றம் கொண்டு ரசிகர்களை கவர்ந்த இவர், கிளாமரான காட்சிகளில் நடிக்க தடை போட்டு இருக்கிறார். படுக்கை அறை காட்சிகள், முத்த காட்சிகள் இருந்தால் அந்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிடுகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட சாய்பல்லவி தான் இரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது சிம்பரனை பார்த்ததாகவும், அந்த படம் என்னவென்று தெரியவில்லை. ஆனால், சினிமாவில் அழகாக இருந்தால் தான் ஜெயிக்க முடியும் என்று நினைத்ததாகவும், அழகாக இருக்கும் நபர்களுக்கு தான் சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்றெல்லாம் நினைத்தேன். ஆனால், தற்போது நான் நடிகையாக இருக்கிறேன். திறமை இருந்தாலும் ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என்பதை தற்போது தான் புரிந்து கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 302

    1

    0