குத்துக்கல்லு மாதிரி இருக்கும் ‘குத்து பட ரம்யா’…. மரணமடைந்ததாக வெளியான தகவல் வதந்தி!!!
Author: Vignesh6 September 2023, 1:00 pm
நடிகை ரம்யா என்ற திவ்யா ஸ்பாந்தனா கன்னட சூப்பர் ஸ்டாரான புனீத் ராஜ்குமாரின் ‘அபி’ என்ற படம் மூலம் சினிமாவில் அடியெடுத்து வந்தார்.
இதன் பிறகு 2004ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான குத்து படத்தில் அறிமுகமானார். இதனையடுத்து, கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம் உட்பட பல படங்களில் நடித்தார்.
கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த ரம்யா, தமிழில் 12 ஆண்டுகளாக வாய்ப்பில்லாமல் இருந்து வந்தார்.
இதன் பிறகு 2012ம் ஆண்டு அரசியலில் குதித்த ரம்யா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். கர்நாடக மாநிலத்தில் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானார். 2017ம் ஆண்டு காங்கிரஸின் சோஷியல் மீடியா பிரிவின் தேசிய தலைவரானார் திவ்யா ஸ்பாந்தனா.
திவ்யாவுக்கு 40 வயதாகி திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் 40 வயதில், இன்று மதியம் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ள செய்திகள் வெளியாகி இந்திய சினிமாவையே அதிரவைத்தது.
திவ்யா ஸ்பாந்தனா குறித்து வெளியான அனைத்து செய்திகளும் போலியானது என்றும், அவரது நலம் விரும்பிகளையும் ரசிகர்களையும் இந்த போலியான செய்தி பீதிக்குள்ளாக்கியது.
சில தமிழ் ஊடகங்களும் திவ்யா ஸ்பாந்தனா இறந்து விட்டதாகவே செய்திகளை வெளியிட்டன. இந்நிலையில், திவ்யா ஸ்பந்தனா குறித்து பத்திரிகையாளர் சித்ரா சுப்பிரமணியன் சரியான நேரத்தில் X வலைதளத்தில் பதிவிட்டு அவர் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் நிம்மதி பெருமூச்சாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Wonderful meeting the very talented and genteel lady @divyaspandana for dinner in Geneva. We talked about many things including our love for Bangalore. 💫 pic.twitter.com/1kN5ybEHcD
— Chitra Subramaniam (@chitraSD) September 6, 2023