‘ஏன் இப்ப என்ன நாடகமா நடிக்கிறேன்…?’. செய்தியாளர்களின் கேள்விக்கு நடிகர் வடிவேலுவின் கலகல பதில்…!!!

Author: Babu Lakshmanan
6 September 2023, 9:54 pm

இவ்வளவு நாள் நடித்த காமெடி மொத்த படத்திற்கு இது ஒத்த படம் மாமன்னன் படம் குறித்து மதுரையில் நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

லைக்கா தயாரிப்பில் பி வாசு இயக்கத்தில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி சந்திரமுகி இரண்டாம் பாகம் தமிழகத்தில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்த நகைச்சுவை நடிகர் வைகை புயல் வடிவேலு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, சந்திரமுகி இரண்டாம் பாகம் எப்படி வந்தது குறித்த கேள்விக்கு, சந்திரமுகி முதல் பாகத்தில் ரஜினி சார் நடித்திருந்தார் இப்போது இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்திருக்கிறார் ரொம்பவும் சுவாரஸ்யமாக வந்திருக்கிறதுநான் அதை முருகேசன் என்னும் கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறேன். படம் நன்றாக வந்திருக்கிறது. நீங்கள் பாருங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள்,” என தெரிவித்தார்.

முதலாம் பாகத்தில் ரஜினியுடன் நடித்தீர்கள், இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்த இது குறித்த கேள்விக்கு, அது அவர் ஸ்டைல் இது இவர் ஸ்டைலு. ரஜினியோட சிஷ்யன் தானே இவரு, அவர் ஒரு மாஸ். இவர் ஒரு மாஸ் இரண்டு பேருடன் நடித்தது நன்றாக இருந்தது, என தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து படங்கள் நடிப்பீர்களா ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்த்த வருகிறார்கள் குறித்த கேள்விக்கு, ஏன் இப்ப என்ன நாடகமா நடித்துக் கொண்டிருக்கிறேன்.” என்றார்.

இதற்கு முன்னதாக உங்களை குணச்சித்திர நடிகர் பார்த்திருக்கிறோம் மாமன்னன் திரைப்படத்தில் சபாநாயகர் நடித்துள்ளீர்கள் குறித்த கேள்விக்கு, “இவ்வளவு நாள் நடித்த காமெடி மொத்த படத்திற்கு இது ஒத்த படம். அதையும் செய்ய முடியும் என்று மாபெரும் படத்தில் நிரூபித்து இருக்கிறோம். வழக்கம்போல் எப்போதும் காமெடி ஸ்டைலில் சந்திரமுகி. திகில் கலந்த காமெடி ஸ்டைல் முருகேசன், அந்த கேரக்டர் பேயிடம் மாட்டிக் கொண்டு எவ்வளவு பாடுபடுகிறான், அந்த படத்திலும் பார்த்திருப்பீர்கள்.

இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றியது குறித்த கேள்விக்கு, நான் என்ன அந்த அரசியலிலே போகவில்லை போகும்போது சொல்கிறேன், என்றார்.

Pan India கலாச்சாரம் குறித்த குறித்த கேள்விக்கு, பிசினஸ் வைத்து செய்கிறார்கள். ஒரே ஏரியாவில் சுற்றிக் கொண்டே இருந்தோம் என்றால், கொட்டாம்பட்டி தாண்ட மாட்டேங்குது, சினிமா வர்த்தகத்தில் பெரிதாக உள்ளது. அதனால் தான் இந்தியா எல்லார் பக்கமும் பிசினஸ் ஆகிறது. பிசினஸ் ஏரியா என்பதால் PAN இந்தியா திரைப்படங்கள் தேவைப்படுகிறது என்று தெரிவித்தார்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!