கூடுதல் விலைக்கு மதுவிற்பனை… மது பிரியரை ஆபாச வார்த்தையில் அர்ச்சனை செய்த விற்பனையாளர் ; ஷாக் வீடியோ..!!!

Author: Babu Lakshmanan
7 September 2023, 11:23 am

நாட்றம்பள்ளி அருகே அரசு டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் விலை செய்யப்பட்டதை எதிர்த்து கேட்ட மது பிரியரை ஆபாச வார்த்தையில் அர்ச்சனை செய்த விற்பனையாளரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வீரகாமோடு அருகில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதில் ஒரு நாளைக்கு 1000 க்கும் மேற்பட்டோர் மது வாங்கி செல்கின்றனர். இன்று வழக்கம் போல மது வாங்க மது பிரியர்கள் கடைக்கு வந்தனர்.

ஒரு குவாட்டர் எம்.ஆர்.பி விலை 130 ரூபாய் என இரண்டு குவாட்டர் வாங்கி உள்ளார். ஆனால் விற்பனையாளர் எம்.ஆர்.பி விலையை விட 10 ரூபாய் கூடுதலாக கேட்டுள்ளார். இதனால் மது பிரியார் ஒருவர் ஒரு குவாட்டர் 130 ரூபாய், இரண்டு கோட்டர் 260 ரூபாய் தான் விலை எனவும், மீதமுள்ள 10 ரூபாய் பணத்தை தாருங்கள் எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதற்கு விற்பனையாளர் நக்கலாக அவ்வளவுதான் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், விற்பனையாளர் மதுப்பிரியரை ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதனை அருகில் உள்ளவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களை பரவச் செய்தார்.

https://player.vimeo.com/video/861907101?badge=0&autopause=0&player_id=0&app_id=58479

இதனால் கூடுதலாக மது விற்பனை செய்யும் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

  • Dragon Movie Box Office Collection கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!