தனுஷை உதறித்தள்ளினாரா ரஜினி…? அதகளம் பண்ணப்போகும் அஜித்-ரஜினி கூட்டணி!

Author: Shree
7 September 2023, 2:20 pm

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது மீண்டும் இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக பக்கா மாஸான திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரஜினி தனது 171வது படத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள இப்படம் ஆரம்பிப்பதற்கு முன்னரே எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது. இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க டாப் ஹீரோ ஒருவரை தேர்வு செய்ய உள்ளாராம் லோகேஷ். இதுவரை லோகேஷ் இயக்கத்தில் விஜய், கமல், விஜய், சூர்யா போன்ற டாப் நடிகர்கள் நடித்துவிட்டனர். ஆனால் தனுஷ் , ரஜினி , அஜித் உள்ளிட்டோர் நடிக்க வில்லை.

எனவே தலைவர் 171 படத்தில் ரஜினியுடன் தனுஷ் அல்லது அஜித்தை நடிக்க வைக்கலாம் என பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ரஜினி தனுஷ் வேண்டாம் என நிராகரித்துவிட்டு அஜித்திடம் கேட்டுப்பாருங்கள் என கூறிவிட்டாராம். இதனால் தலைவர் 171 படம் வெளியாவதற்குள் தனுஷ் ஒரு மாபெரும் கிளாசிக் படமொன்றில் நடித்து ரஜினியுடன் போட்டுப்போட்டு ஹிட் கொடுக்க காத்திருக்கிறாராம். அஜித் தனுஷ் கூட்டணி அமைந்துவிட்டால் அந்த படம் வரலாற்று முத்திரை பதிக்கும் என கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்