கிருஷ்ணனாக மகன்களை அலங்கரித்த நயன்தாரா…. வைரலாகும் லேட்டஸ்ட் கியூட் போட்டோ!
Author: Shree7 September 2023, 3:46 pm
கோலிவுட் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராகவும் ஸ்டார் ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் ஒரே நடிகையாகவும் இருந்து வரும் நயன்தாரா மலையாள குடும்பத்தை சேர்ந்தவர். இவர் தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகனார், அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.
பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். மகன்களுக்கு “உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் ” என தன் பெயரையும் நயன்தாரா பெயரையும் உயிர் , உலகம் என்பதன் அடிப்படையில் வைத்துள்ளனர்.
தொடர்ந்து சில சிக்கல், படுதோல்விகள், கணவருக்கு கைநழுவிப்போன வாய்ப்புகள் என சோகத்தில் மூழ்கிய நயன்தாரா கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து தொடர்ந்து வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவர் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் கால்தடம் பதிக்க உள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த பல ஸ்டார் நடிகர்களுடன் ஜோடி போட மும்முரமாக முயற்சிகள் செய்து வருகிறார். அண்மையில் முதன்முறையாக இன்ஸ்டாகிராமுக்கு வந்த நயன்தாரா தனது மகன்களின் முகத்தை காட்டினார்.
இந்நிலையில் நயன்தாரா கிருஷ்ணா ஜெயந்தி முன்னிட்டு தனது மகன்களை கிருஷ்ணராக அலங்கரித்த பின் அழகான புகைப்படமொன்றை வெளியிட்டுள்ள விக்னேஷ் சிவன், ” எங்கள் இரு கிருஷ்ணர்களுடன்! இந்த ஆசீர்வதிக்கப்பட்ட கிருஷ்ணஜெயந்தி நாள் மிகவும் அழகான, ஆசீர்வதிக்கப்பட்ட தருணங்கள்!
எங்கள் #உயிர் & #உலகிற்கு அனைத்து அன்பும்.அனைவருக்கும் இனிய கிருஷ்ணஜெயந்தி வாழ்த்துக்கள் என பதிவிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இருந்தாலும் முகத்தை காட்டியிருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.