ஒரு வருடம் தான்… திமுக கட்சியே அழிந்துவிடும் : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை வெளியிட்ட வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
7 September 2023, 8:53 pm

ஒரு வருடம் தான்… திமுக கட்சியே அழிந்துவிடும் : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை வெளியிட்ட வீடியோ!!

தமிழகத்தில் இருந்து ஏதாவது ஒழிக்கப்பட வேண்டுமெனில், அது திமுக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், D-டெங்கு, M-மலேரியா, K-கொசு என திமுகவை விமர்சனம் செய்துள்ளார். வரும் தேர்தலில், ‘சனாதன தர்மத்தை’ முன்னிறுத்தி, களத்தில் போராடுவோம். சனாதன தர்மத்தை ஒழிக்கப்போவதாக திமுக சொல்கிறது, அதனால், சனாதன தர்மத்தை காப்போம் என்று சொல்வோம்.

இதனால், தமிழக மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். திமுகவின் நாடகம் பல ஆண்டுகளாக நமக்குத் தெரியும். நீங்கள் ஆட்சிக்கு வந்த முதல் வருடம் ‘சனாதன தர்மத்தை’ எதிர்க்கிறீர்கள், இரண்டாவது வருடம் ‘சனாதன தர்மத்தை’ ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். மூன்றாம் ஆண்டு ‘சனாதன தர்மத்தை’ கொடூரமாக வேரறுக்க நினைக்கிறீர்கள்.

நான்கு மற்றும் ஐந்தாம் ஆண்டு இந்து என்று சொல்கிறீர்கள். திமுக கட்சிக்காரர்களில் 90% இந்துக்கள் என்று சொல்கிறீர்கள். எனவே, 2024ல் திமுக என்ற கட்சி அழிந்துவிடும்.

டி என்றால் டெங்கு, எம் என்றால் மலேரியா, கே என்றால் கொசு என விமர்சித்துள்ளார். இனி வரும் காலங்களில் இந்த கொடிய நோய்களை மக்கள் திமுகவுடன் தொடர்பு படுத்துவார்கள் என்பதில் உறுதியாக உள்ளோம்.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்றைய அறிக்கைக்கு எனது விரிவான மறுப்பு இதோ என அண்ணாமலை பேசியுள்ள வீடியோவையம் வெளியிட்டுள்ளார்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…