அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கரைப்பு.. விசாரணையில் பகீர் : விருதுநகர் மக்கள் அதிருப்தி!!

Author: Udayachandran RadhaKrishnan
8 September 2023, 10:29 am

அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கரைப்பு.. விசாரணையில் பகீர் : விருதுநகர் மக்கள் அதிருப்தி!!

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னமூப்பன்பட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கும் இந்தப் பள்ளியில், 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை சிற்றுண்டிக்கு வந்த சமையக்காரர்கள் குடிநீர் தொட்டியில் இருந்த நீரை பயன்படுத்த முயற்சித்தனர். அப்போது அதிலிருந்து துர்நாற்றம் வந்ததாகவும் இது குறித்து தலைமை ஆசிரியரிடம் தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து தலைமை ஆசிரியர், சின்டெக்ஸ் தொட்டியில் இருந்த தண்ணீரை பார்த்துள்ளார். அப்போது அதில், மாட்டுச் சாணம் கலக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து உடனடியாக அதிகாரிகளுக்கும், காவல்துறைக்கும் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் ஊர் மக்கள், உடனடியாக சின்டெக்ஸ் தொட்டியை அப்புறப்படுத்தி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவ மாணவிகள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணத்தை கரைத்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Bigg Boss Love Proposalபிக் பாஸ் வீட்டில் லவ் பிரபோஸ் செய்த சௌந்தர்யா.. வைரலாகும் ப்ரோமோ!
  • Views: - 392

    0

    0