பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் பயில்வான்? அவரே கொடுத்த விளக்கம்.. கடைசியில் சொன்னது ஹைலைட் ..!

Author: Vignesh
8 September 2023, 3:30 pm

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்க உள்ளனர். அதற்கான வேளைகளில் பிக்பாஸ் குழு மும்முரமாக இறங்கியுள்ளது. இந்த முறை யார் யாரெல்லாம் பங்கேற்க உள்ளார்கள் என்பதை கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம். கடைசியாக முகமது அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அடுத்த சீசனுக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனும் மற்ற சீசன்களை போலவே சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் இருக்கவேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்களாம்.

bayilvan-ranganathan-updatenews360-4

இந்நிலையில், பிக் பாஸ் குறித்து பயில்வான் ரங்கநாதன் வெளிப்படையாக பல்வேறு விஷயங்களை பேசி உள்ளார். அதாவது, பிக் பாஸ் போட்டியாளர்கள் அசிங்கம் அசிங்கமாக பேசுவதை பிக் பாஸ் நிகழ்ச்சியில் அப்படியே காண்பிப்பார்கள். அதுமட்டுமின்றி உள்ளே காதலிப்பவர்களின் காதலானது வெளியே வந்ததும் புஸ்வானம் ஆகிவிடும். பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் பெண்கள் பெரும்பாலும் விவாகரத்தான பெண்களாக தான் இருக்கிறார்கள். மேலும், அந்த வீட்டில் மது அருந்துவதற்கும் புகைப்பிடிப்பதற்கும் தனி அறைகள் இருக்கிறது. தான் பிக்பாஸ் வீட்டில் செல்ல மாட்டேன். ஏனென்றால், எனக்கு சூடு சொரணை இருக்கிறது என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 463

    0

    0