படுக்கையறை காட்சியில் நடிப்பது தனிப்பட்ட விஷயம்.. பூர்ணிமா ரவி ஓப்பன் டாக்..!

Author: Vignesh
14 September 2023, 1:30 pm

சமீப காலமாக யூடியுப் போன்ற சமூக வலைத்தளம் மூலமாக பிரபலமானவர்கள் அதிகம். ஏறத்தாழ சினிமா பிரபலங்களை விட, யூடியூப் பிரபலங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் அதிக ரசிகர்களை கொண்டவர்தான் பூர்ணிமா என்னும் அராத்தி.

கலர் முக்கியமில்லை திறமைதான் முக்கியம் என்று தன்னுடைய யூடியூப் சேனல் மூலம் நிரூபித்துக் காட்டினார். இவருடைய ஆரத்தி என்ற சேனலுக்கு மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள் உள்ளனர்.

மெல்ல மெல்ல சினிமாவில் நுழைந்து வரும் பூர்ணிமா விரைவில் ஹீரோயினாக அறிமுகமாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அதற்கு ஒத்திகை பார்க்கும் வகையில் தற்போது தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கிளாமர் புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு ரசிகர்களை பரபரப்பில் வைத்திருப்பார்.

சமீபத்தில் பேட்டியொன்றில், கலந்து கொண்ட பூர்ணிமாவிடம் தொகுப்பாளர் படுக்கையறை காட்சியில், நடிப்பீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அவர், படுக்கையறை காட்சிகள் எதுவாக இருந்தாலும் அது கதையுடன் ஒத்துப் போக வேண்டும். திணிக்கப்பட்டதாக இருக்கக் கூடாது. மேலும், ரொமான்ஸ் அல்லது படுக்கையறை காட்சிகளில் நடிப்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.

  • Mammootty replaced in Baasha Movieரஜினியுடன் மம்முட்டி நடிக்க வேண்டிய இன்னொரு படம்.. பறிபோன வாய்ப்பு!
  • Views: - 598

    0

    0