நான் தாலி கழட்ட போவதில்லை… மாரிமுத்து மறைவுக்கு பின் மனைவி அதிரடி முடிவு!

Author: Shree
14 September 2023, 5:33 pm

பிரபல திரைப்பட இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து சமீப நாட்களாக ட்ரெண்டிங்கில் இருந்து வந்தார். இதனிடையே நடிகர் மாரிமுத்துவின் திடீர் மரணம் பலருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. நடிகர், இயக்குநர் மாரிமுத்து (57) ‘எதிர்நீச்சல்’ தொடர் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். பல படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த ‘ஜெயிலர்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.

அடுத்ததாக கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் செப்டம்பர் 8ம் தேதி காலை சீரியல் ஒன்றிற்காக டப்பிங் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். இவரது மரணம் யாராலும் ஏறுகொளவே முடியவில்லை.

அவருடன் நடித்த நடிகர் நடிகைகள் அந்த கவலையில் இருந்து இன்னும் மீண்டு வரவே இல்லை. மாரிமுத்துவின் மரணத்திற்கு பின் ஆதி குணசேகரன் கேரக்டரை யாராலும் நிரப்பவே முடியாது என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது, மறைந்த மாரிமுத்துவின் மனைவி பாக்கியலட்சுமி அதிர்ச்சி முடிவு எடுத்துள்ளார். அதாவது நான் என் தாலி கழட்ட போவதில்லை. என் கணவர் மறைந்தாலும் அவர் என்னுடன் தான் இருக்கிறார் என அவர் இந்த முடிவெடுத்துள்ளாராம். இந்த முடிவு பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

  • Vijay Trisha Sangeetha விஜய் வீட்டில் வெடித்த திரிஷா விவகாரம்.. சங்கீதா பாவம் : பரபரப்பை கிளப்பிய பிரபலம்!
  • Views: - 460

    0

    0