புத்தகம் தூக்க வேண்டிய கையில் ‘புட்டி’ : பள்ளிச் சீருடையில் மது வாங்கும் மாணவர்கள்.. ஷாக் காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
14 September 2023, 10:01 pm

புத்தகம் தூக்க வேண்டிய கையில் புட்டி : பள்ளிச் சீருடையில் மது வாங்கும் மாணவர்கள்.. ஷாக் காட்சி!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு டாஸ்மாக் மதுபான கடையில் பள்ளி சீருடை உடன் இரண்டு சிறுவர்கள் மது பாட்டில் வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்ல முற்பட்டனர்

அப்போது அங்கே மது அருந்தி கொண்டிருந்த மது பிரியர்கள் சிலர் அதிர்ச்சி அடைந்து பள்ளி மாணவர்களை தடுத்து நிறுத்தி பள்ளி சீருடை உடன் மது வங்கி செல்கிறீர்களே என்று அவர்களிடம் கேள்வி எழுப்பினர் 21 வயது நிரம்பாத சிறார்கள் மது அருந்தக்கூடாது என்று அரசு சட்டம் பிறப்பித்துள்ளது. நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள் என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அந்த பள்ளி மாணவர்கள் தனது தாத்தாவிற்கு சரக்கு வாங்கி செல்வதாகவும், அவர்தான் எங்களை கட்டாயப்படுத்தி மதுபானம் வாங்கி வர அனுப்பினார் எனவும் அவர்களிடம் கூறினர்.

இதைக் கேட்ட மது பிரியர்கள் சிறுவர்கள் கூறுவது உண்மைதான் என நினைத்து அவர்களை இருசக்கர வாகனத்தில் செல்கிறீர்கள் மெதுவாக செல்லுங்கள் என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

அதனை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் இருவரும் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தைக் வேக வேகமாக எடுத்துக் கொண்டு தப்பி ஓடினால் போதும் என்று நினைத்து தெரிந்து ஓடினர்.

https://vimeo.com/864479729?share=copy

தற்போது இந்த காட்சிகளை அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார் அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 350

    0

    0