அஜித் எங்களுக்கு மருமகன் இல்லை.. இப்படி ஒரு முகம் இருக்கா? மாமனார் வெளியிட்ட உண்மை..!

Author: Vignesh
15 September 2023, 10:56 am

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தல அஜித். இவர் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஹீரோவாக பார்க்கப்படுகிறார். மற்ற நடிகர்களை போன்று படங்களில் நடித்துவிட்டு அதை வித விதமாய் ப்ரோமோஷன் செய்வதெல்லாம் அஜித்திற்கு சுத்தமாக பிடிக்காத ஒன்று. பொய்யாக வியாபாரம் செய்து மக்களை ஏமாற்றி படம் பார்க்க வைத்து தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுக்கவே மாட்டார்.

திரைப்படங்களில் நடிப்பதோடு சரி அதன் பின்னர் எந்த ஒரு நிகழ்ச்சிக்கோ, நேர்காணலுக்கோ, பொது விழாக்களிலோ அஜித்தை பார்க்கவே முடியாது. ஒரு படம் முடித்துவிட்டால் ட்ரிப் சென்றுவிடுவார். இல்லையெனில் துப்பாக்கி சுடுதல், பைக் ரேஸ் , கார் ரேஸ் ட்ரோன் ஆராய்ச்சி உள்ளிட்டவற்றில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு செல்வது தான் அஜித்தின் வழக்கமான பழக்கங்களில் ஒன்றாக பார்க்கிறோம்.

படங்களில் நடிப்பதோடு சரி அதன் பிறகு எந்த ஒரு பப்ளிசிட்டியையும் விரும்பாத சாதாரண மனிதராகவே நடந்துக்கொள்வார். இந்நிலையில் ஷாலினி அப்பா ஏ எஸ் பாபு அஜித் ஷாலினி காதல் பற்றிய சுவாரசியமான விஷயத்தை பகிர்ந்துள்ளார். ஷாலினிக்கும் அஜித்துக்கும் ஜாதகம் பார்த்த பொழுது பத்து பொருத்தமும் சூப்பர் என்று சொன்னாங்க அவங்க அப்படி சொன்னது உண்மைதான். அப்படி ஒரு அன்பான ஜோடி என்றும், அஜித் எங்களுக்கு மருமகன் இல்லை. இன்னொரு மகன்தான் என்று பெருமையுடன் தெரிவித்து இருக்கிறார்.

மேலும், அஜித் வீட்டிற்கு யார் வந்தாலும், தண்ணி கொடுப்பதிலிருந்து சாப்பாடு பரிமாறுவது வரை அவரே தான் செய்வார். வேலையாட்களை குடும்ப உறுப்பினர் போல் தான் நடத்துவார். அந்த குணம் மற்றவர்களையும் பற்றிக்கொள்ளும் அவ்வளவு பாசிட்டிவிட்டியோடு அன்பாக இருப்பார் அஜித் என்று தெரிவித்துள்ளார்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!