விஷாலோட உதடு இருக்கே… அதை அப்படியே : பேட்டியில் மெய்மறந்த லட்சுமி மேனன்!!
Author: Vignesh15 September 2023, 3:30 pm
கேரளாவில் பிறந்து வளர்ந்த நடிகை லட்சுமி மேனன் தன்னுடைய பள்ளி படிப்பு படிக்கும் பொழுது சினிமாவில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் இவர் 2011ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சிகள் பரதநாட்டியம் ஆடிய பொழுது இவரைப் பார்த்த பிரபல மலையாள இயக்குனர் ஒருவர் இவரை திரைப்படங்களில் நடிக்க வைத்து அழகு பார்த்தார். தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ள இவர் முதலில் 2011ல் மலையாளத்தில் வெளிவந்த ரகுவிண்டெ சுவந்தம் ரசியா என்ற திரைப்படத்தில் நடித்தார்.
இப்படம் வசூல் ரீதியாக வெற்றியைத் தேடித்தந்தது. அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு இயக்குனர் பிரபாகரன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல்வேறு ரசிகர் பெருமக்களை கவர்ந்தர். மேலும் தான் நடித்த முதல் திரைப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற நமது நடிகை சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.
அதன் பிறகு கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன் பல திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது இவர் சந்திரமுகி 2வில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட லட்சமி மேனனிடம் தொகுப்பாளர், எதோ ரொம்ப ஸ்பைசி சில்லியா அல்லது விஷாலோட லிப்ஸ் என்று வேடிக்கையாக கேள்வி கேட்டார். இதற்கு பதில் அளித்த லட்சுமி மேனன், சில்லி தான் ரொம்ப ஸ்பைசி, இதுவே ஸ்வீட் என்று கேள்வி கேட்டு இருந்தால் விஷால் லிப்ஸ் என்ற பதிலை சொல்லி இருப்பேன் என்று கூறியுள்ளார்.