காட்டுக்கு போய் அத செஞ்சாலும் செய்வேன்… ஆனால், பிக்பாஸ் வீட்டுக்கு – கமல் ஹாசனை Insult செய்த சர்ச்சை நடிகை!

Author: Shree
15 September 2023, 5:20 pm

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

bigg boss 7 tamil-updatenews360

தற்போது அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்க உள்ளனர். அதற்கான வேளைகளில் பிக்பாஸ் குழு மும்முரமாக இறங்கியுள்ளது. இந்த முறை யார் யாரெல்லாம் பங்கேற்க உள்ளார்கள் என்பதை கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம். கடைசியாக முகமது அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.

7வது சீசனுக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனும் மற்ற சீசன்களை போலவே சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் இருக்கவேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் சர்ச்சைக்குரிய நடிகை ரேகா நாயர் பங்கேற்க உள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இது குறித்த கேள்விக்கு பேட்டி ஒன்றில் பதில் கூறிய ரேகா நாயர், நான் பிக்பாஸில் கலந்துக்கொள்ளப்போகிறேன் என்று வெளிவரும் செய்தி இது முதல் முறையல்ல. இதற்கு முன்னர் ஒளிபரப்பான சீசன்களின் போட்டியாளர் லிஸ்டில் எனது பெயர் தொடர்ந்து அடிபட்டு வருகிறது.

rekha nair

இப்போ ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோங்க, “நான் யாருமில்லாத ஒரு காட்டுக்குள் போய் இருக்க சொன்னால் கூட அங்கு எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் இருப்பேன். ஆனால் பிக்பாஸ் வீட்டிற்குள் கண்டிப்பாக போக மாட்டேன். அங்கு செல்வதற்கு எனக்கு துளியும் விருப்பமில்லை. 100 நாட்கள் ஒரு வீட்டிற்குள் போய் இருப்பதற்கு பதிலாக, தினமும் ஒரு மரம் என 100 மரங்கள் நடலாம் என கூறியுள்ளார். இதை கேட்ட நெட்டிசன்ஸ் ரேகா நாயரா இப்படி பேசுறது கமல் சாரின் முகத்தில் அடித்தார் போல் பேசிவிட்டாரே என பாராட்டி வருகிறார்கள்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…