பிக்பாஸ்7 சீசன் ஆரம்பிச்சாச்சு… தொடக்க Promoவுடன் வெளியான அப்டேட்!

Author: Shree
15 September 2023, 8:29 pm

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்க உள்ளனர். அதற்கான வேளைகளில் பிக்பாஸ் குழு மும்முரமாக இறங்கியுள்ளது. இந்த முறை யார் யாரெல்லாம் பங்கேற்க உள்ளார்கள் என்பதை கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம். கடைசியாக முகமது அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அடுத்த சீசனுக்கான துவக்க வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனும் மற்ற சீசன்களை போலவே சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் இருக்கவேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்களாம். இந்நிலையில் சற்றுமுன் பிக்பாஸ் 7 சீஸனின் லேட்டஸ்ட் அப்டேட்டுடன் கூடிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் வருகிற அக்டோபர் 1ம் தேதி முதல் மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என தெரிவித்துள்ளார் கமல் ஹாசன். இதோ அந்த வீடியோ:

  • Suriya Act in Luck Bashkar Directors Next Movieலக்கி பாஸ்கர் இயக்குநரின் அடுத்த பிரம்மாண்டம்.. சூர்யாவுக்கு லக்கோ லக்!
  • Views: - 277

    0

    0