பள்ளி, கல்லூரிகளுக்கு செப்டம்பர் 24 வரை விடுமுறை… அரசு வெளியிட்ட ‘திடீர்’ அறிவிப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
16 September 2023, 12:40 pm

பள்ளி, கல்லூரிகளுக்கு செப்டம்பர் 24 வரை விடுமுறை… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்த நிலையில், மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோருடன் தொடர்பில் இருந்த 1,080 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோழிக்கோடு மாவட்டத்தில் வரும் 24 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று வரை 6 பேர் நிபா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, நிபா வைரஸ் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குநர் ராஜிவ் பால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இறப்பதற்கான விகிதம் 2 விழுக்காடாக இருக்கும் நிலையில், நிபா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மரணமடைய 40 முதல் 70 விழுக்காடு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சூழலில் ஆஸ்திரேலியாவில் இருந்து நோய் எதிர்ப்பு மருந்தான monoclonal antibody மருந்து 20 டோஸ்களை மத்திய அரசு வாங்க இருப்பதாகவும் ராஜிவ் கூறியுள்ளார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…