ராதிகா வீட்ல விசேஷம்.. சரத்குமாரின் செயலால் குவிந்த பிரபலங்கள்..!
Author: Vignesh17 September 2023, 6:15 pm
தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவரான சரத்குமார் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதியாக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலமானவராக அறியப்பட்ட இவர் பின்னாளில் சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார்.
திரைத்துறைக்கு வருவதற்கு முன்னரே சாயாதேவி என்பவரைக் காதலித்து திருமணம் செய்துக்கொண்ட சரத்குமார் வரலட்சுமி, பூஜா என்னும் இரு மகள்கள் பெற்றார் . அதன் பின்னர் அவர் சினிமாவில் நடித்த போது நடிகை நக்மாவுடன் ஏற்பட்ட காதலால் மனைவி சாயாதேவி அவரை விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் நடிகை ராதிகாவை முறைப்படி இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார்.
தற்போது, சரத்குமார் மற்றும் ராதிகா ஆகியோரின் புதுமனை புகுவிழா தற்போது நடந்து முடிந்திருக்கிறது. புதுமனை புகுவிழாவுக்கு நடிகர் தனுஷ் மீனா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் வந்திருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் தற்போது, இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.