வெறும் ரூ.34 ஆயிரம் தான்…. இன்ஸ்பெக்டருடன் போலீஸ் ஸ்டேசன் வாடகைக்கு…. கட்டணத்தை வெளியிட்டது காவல்துறை..!!

Author: Babu Lakshmanan
18 September 2023, 12:19 pm

ரூ.34 ஆயிரத்துக்கு காவல்நிலையத்தை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று கேரள காவல்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பொதுவாக திருமண மண்டபங்கள், வீடுகள், கார்கள், பைக்குகள், சைக்கிள்கள் உள்ளிட்டவை வாடகைக்கு கொடுத்து பார்த்திருப்போம். ஆனால், கேரளாவில் சற்று வித்தியாசமாக, காவல்நிலையத்தை வாடகைக்கு விட்டு அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது அம்மாநிலக் காவல்துறை.

ரூ.34 ஆயிரத்தை செலுத்தினால் காவல்நிலையத்தை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று கட்டணப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், போலீஸ் நிலையத்துடன் இன்ஸ்பெக்டர் மோப்பநாய், வயர்லெஸ் கருவிகள் உள்ளிட்டவைகளையும் கட்டணம் செலுத்தி வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு வசதிக்கான கட்டண பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது. நாள் ஒன்றுக்கு போலீஸ் நிலையத்திற்கு ரூ12 ஆயிரம், வயர்லெஸ் கருவிகளுக்கு ரூ12ஆயிரத்து 130, மோப்ப நாய்க்கு ரூ7ஆயிரத்து 280, போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ.3 ஆயிரத்து 35 முதல் ரூ.3ஆயிரத்து 340 வரை என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இன்ஸ்பெக்டருக்கு பதிலாக சிவில் போலீஸ அதிகாரிக்கான கட்டணம் ரூ610 ஆகும். காவல்துறை வெளியிட்டுள்ள இந்த பட்டிலின்படி, போலீஸ் இன்ஸ்பெக்டரை விட போலீஸ் மோப்ப நாய்க்கு வாடகை அதிகமாக இருக்கிறது. ஆனால் அதற்கான காரணம் தெளிவாக கூறப்படவில்லை.

காவல்துறையின் இந்த முடிவுக்கு பொதுமக்களில் பலரும், அரசு அதிகாரிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இருப்பினும், அரசின் நிதி நெருக்கடியை சரிசெய்வதற்கான திட்டம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!