ரொம்ப லேட்டா இருந்தாலும் நல்ல முடிவு… அதிமுகவின் முடிவு குறித்து சீமான் வரவேற்பு!!!
Author: Udayachandran RadhaKrishnan19 September 2023, 8:54 am
ரொம்ப லேட்டா இருந்தாலும் நல்ல முடிவு… பாஜக உடனான கூட்டணி முறிவு குறித்து சீமான் வரவேற்பு!!!
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள், தமிழகத்தில் தொடர்ந்து வந்த அதிமுக – பாஜக கூட்டணி இல்லை என அறிவித்துள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து ஜெயலலிதா, அண்ணா பற்றி அண்ணாமலை இழிவாக பேசிய நிலையில், கூட்டணி முறிந்ததாகவும், தேர்தல் நேரத்தில் கூட்டணி முடிவு எடுக்கப்படும் என ஜெயக்குமார் அறிவித்திருந்தார்.
அதிமுகவின் இந்த முடிவு குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்ற்னர்.
அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டதாக அறிவித்திருக்கும் அதிமுகவின் முடிவை வரவேற்கிறேன்.
மிகத் தாமதமான முடிவென்றாலும் சரியானதொரு முடிவு; காங்கிரஸ், பாஜக எனும் இரு இந்திய ஒன்றியக் கட்சிகளுமே தமிழ்நாட்டுக்கும், தமிழினத்திற்கும் எதிரிகள்தான் என தெரிவித்துள்ளார்.