சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட TTF.. ஜாமீனில் கூட வெளிவர முடியாத அளவிற்கு வழக்குப்பதிவு..!
Author: Vignesh19 September 2023, 11:45 am
தேசிய நெடுஞ்சாலையில் சாகசம் செய்ய முயன்ற போது பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன் பைக் ஓட்டுவதில் ஆர்வமிக்கவர். பல்வேறு சாகசங்களை புரிந்துள்ளார். இந்த நிலையில், பெங்களூர் சென்னை விரைவுச் சாலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு டிடிஎப் வாசன் சென்று கொண்டிருந்தார். அப்போது, காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி அருகே முன் சக்கரத்தை தூக்கி வீலிங் செய்த பொழுது நிலைதடுமாறினார்.
அப்போது, வந்த வேகத்தில் சாலையின் தடுப்பில் மோதி பைக் ஒருபுறமும், டிடிஎஃப் வாசன் மற்றொரு புறமும் தூக்கி வீசப்பட்டனர்.
நல்வாய்ப்பாக, சிறு காயங்களுடன் டிடிஃப் வாசன் உயிர் தப்பித்தார். தற்போது, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பேசு பொருளாகவும் மாறியுள்ளது.
இதனிடையே, காஞ்சிபுரம் அருகே சாகசத்தில் ஈடுபட முயன்று விபத்தில் சிக்கிய பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதோடு, விபத்தில் சிக்கி சேதமடைந்த பைக்கை பறிமுதல் செய்தும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில், TTF வாசன் கைது செய்யப்பட்டுள்ளார். வீலிங் அடிக்க முயற்சி செய்த தனக்கு தானே விபத்து ஏற்படுத்தி கொண்டதாக தற்போது TTF வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜாமீனில் கூட வெளிவர முடியாத அளவிற்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர்.