MBC சாதிச் சான்றிதழ் வேணுமா? ரூ.5 ஆயிரம் இருந்தால் போதும் : கொந்தளித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 September 2023, 1:45 pm

MBC சாதிச் சான்றிதழ் வேணுமா? ரூ.5 ஆயிரம் இருந்தால் போதும் : கொந்தளித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!!

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஓர் குற்றசாட்டை முன்வைத்து உள்ளார். அதில், லஞ்ச பணம் கொடுத்தால் போலியாக ‘மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC)’ சான்றிதழ் கிடைக்கிறது என பதிவிட்டுள்ளார்.

அவர் தனது X சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) சாதிச்சான்றிதழ் வேண்டுமென்றால் 5000 ரூபாய் இருந்தால் போதுமானது.

தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள ஏதேனும் சாதிகளின் பெயர்களில் போலியான சாதிச் சான்றிதழ்களைப் பெறுவது இப்போது அதிகரித்து விட்டது.

அதற்காகவே தமிழகத்தில் உள்ள தரகர்களிடம் 5000 ரூபாய் கொடுத்தால் போதும். உடனடியாக நீங்கள் கேட்கும் பெயரில் சாதிச் சான்றிதழ் கிடைத்து விடும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை தமிழக அரசு அளிக்க வேண்டும் என அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது.

மேலும் இது தொடர்பான வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் 10.5 சதவீத இடஒதுக்கீட்டு மசோதாவை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் தொடர் கோரிக்கை முன்வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Surya Clash With Ajith அஜித்துக்கு எதிராக களமிறங்கும் சூர்யா.. ஒரு கை பார்க்க முடிவு!!
  • Views: - 367

    0

    0