பிரபல சீரியல் நடிகருக்கு ஜோடியான ஜோதிகா.. வைரலாகும் வீடியோ..!

Author: Vignesh
19 September 2023, 3:00 pm

புஷ் புஷ் நடிகையாக கொழுக் மொழுக் அழகியாக அக்கட தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தவர் நடிகை ஜோதிகா. இந்தி சினிமாவில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த ஜோதிகா வாலி படத்தில் காமியோ ரோலில் நடித்து அறிமுகமானார் .

jyothika-updatenews360

முதல் படத்திலே நல்ல அறிமுகத்தை பெற்ற அவர் தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, குஷி, பூவெல்லாம் உன் வாசம், பிரியமான தோழி, தூள், காக்க காக்க, மன்மதன், பேரழகன், சந்திரமுகி, சில்லுனு ஒரு காதல் இப்படி பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

காக்க காக்க படத்தில் நடித்த போது நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் தியா, தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின்னர் சினிமாவிற்கு முடிவுகட்டிய ஜோதிகா இப்போது 2.o வெர்ஷனில் இரண்டாவது இன்னிங்சில் நடித்து வருகிறார். இதனிடையே இந்தி படங்களில் நடிக்க கவனம் செலுத்தி மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.

surya -updatenews360

இதனிடையே, தமிழில் பல படங்களில் பேச்சுவார்த்தை நடத்தியும், மலையாளம், இந்தி மொழிகளில் நடித்தும் வருகிறார் ஜோதிகா. பிரேக் எடுத்திருந்தபோது கூட சூர்யாவுடன் விளம்பர படங்களில் நடித்து வந்தார். தற்போது நடிகர் மிர்ச்சி செந்திலுடன் பிஸ்கட் விளம்பரத்தில் நடித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களும் வீடியோவையும், தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • Ajithkumar racing நீங்க படத்த பாருங்க.. நான் ரேஸ பாக்குறேன்.. அஜித்தின் வீடியோ வைரல்!