சில்க் ஸ்மிதா கடித்த ஆப்பிளை ஏலம் விட்ட தயாரிப்பாளர் – எவ்வளவு விலை போச்சு தெரியுமா?
Author: Shree19 September 2023, 2:20 pm
இந்திய சினிமாவின் மர்லின் மன்ட்ரோ என்று புகழப்பட்ட நடிகை சில்க் ஸ்மிதா செல்லுலாய்டு முதல் டிஜிட்டல் வரையிலான இந்திய சினிமா வரலாற்றில் தன்னுடைய இடத்தை வேறொரு நடிகையால் நிரப்ப முடியாத படிக்கு ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறார். 1970களில் ஒரு ஒப்பனைக் கலைஞராக திரைத்துறையில் வாழ்க்கையை துவங்கிய இவர் தமிழ் நடிகர் வினுசக்கரவர்த்தியால் வண்டிச்சக்கரம் என்கிற திரைப்படத்தில் சிலுக்கு என்கிற சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தினார்.
அந்தப் பெயரே இவருக்கு சினிமாவில் நிலைத்துவிட்டது. இவரது 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 450ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு விதமான கிளாமரான காட்சிகளில் நடித்தார். திருமண வாழ்க்கையில் பெரும் துன்பவங்களை அனுபவித்த சில்க் சென்னைக்கு பிழைப்பு தேடியும் புது வாழ்க்கை தேடியும் ஓடிவந்து இவரது உறவினர் வீட்டில் தங்கினார்.
பல்வேறு மலையாள மொழி திரைப்படங்களில் அதிகம் படங்கள் நடித்துள்ளார். இவரது மரணம் இன்னும் மர்மமாகவே இருக்கிறது. இந்நிலையில் தற்போது சில்க் ஸ்மிதா குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, சில்க் நடித்த படப்பிடிப்பில் சில்க் கடித்துப்போட்ட ஆப்பிளை எடுக்க அங்கிருந்த ரசிகர்கள் போட்டி போட்டு சண்டையிட்டு மோதிக்கொண்டார்களாம். இதையடுத்து ஒரு யோசனை செய்த படத்தின் தயாரிப்பாளர் சில்க் கடித்த ஆப்பிளை ஏலம் விட்டுள்ளார். அப்போ ரூ. 2 கூட இல்லாத அதன் விலையை ரூ. 350க்கு ஒரு தீவிர சில்க் வெறியன் ஏலம் எடுத்து சென்றாராம். இது அப்போது பரப்பராக பேசப்பட்டது.