பஸ் ஸ்டாப்பில் மாணவிக்கு கத்தி குத்து… தப்பி ஓடிய இளைஞர் ; சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!!
Author: Babu Lakshmanan20 September 2023, 5:02 pm
சென்னையில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த கல்லூரி மாணவியை இளைஞரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.
பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் வண்டலூர் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். வழக்கம் போல கல்லூரிக்கு செல்வதற்காக, மேடவாக்கம் பேருந்து நிலையத்தில் மாணவி காத்திருந்தார்.
அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர், மாணவியை அங்கிருந்து ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு இழுத்துச் சென்றுள்ளார். மேலும், தன்னை காதலிக்கும்படி தொந்தரவு கொடுத்துள்ளார். இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர், பெண்ணின் கை, கால், முகத்தில் கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு, குரோம்பேட்டையில் முதலுதவி பெற்று, ஸ்டான்லி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, மாணவியை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடிய இளைஞரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். சென்னையில் மாணவியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.