மீண்டும் தன் கேவலமான தொழிலை ஆரம்பித்தாரா பாலா…? திருந்தவே மாட்டாரா?
Author: Shree20 September 2023, 5:06 pm
தமிழ் சினிமாவின் விசித்திர இயக்குனர் பாலா தொடர்ந்து தன் படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளை நல்ல நடிப்பு வரவைக்க கொடுமை படுத்துவதாக பரதேசி படத்தில் நடித்த நடிகர்கள் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினர். அண்மையில் கூட பிதாமகன் மகன் பட தயாரிப்பாளர் வி.ஏ.துரையிடம் ரூ. 25 லட்சம் பணம் வாங்கிவிட்டு அவரை ஏமாற்றிவிட்டதாக கூறினார். அடுத்த இரண்டு நாட்களில் வணங்கான் படத்தில் நடித்த துணை நடிகைகளை சம்பளம் கொடுக்காமல் அவர்களை அடித்து உதைத்து கொடுமைப்படுத்திய விவகாரத்தில் சிக்கினார்.
தொடர்ந்து இப்படி பல பேரை ஏமாற்றி வயிற்றில் அடிச்சு பிழைப்பு நடத்தி வரும் பாலா தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், இயக்குனர் பாலாவின் “பாலசுப்பிரமணியன் பழனிச்சாமி” என்ற பெயரில் யாரோ போலியான இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கி அதில் புகைப்படங்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டு வருகிறார். அந்த கணக்கில் இருந்து நான் தான் இயக்குனர் பாலா என்று முறையற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், குறிப்பாக திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வமுள்ள பெண்களிடம் தவறான நோக்கத்தில் குறுஞ்செய்திகள் அனுப்பி உரையாடி படவாய்ப்பு தருவதாக நம்பிக்கை ஏற்படுத்தி ஆபாசமான புகைப்படங்களையும் கேட்டுள்ளார்.
இந்த சம்பவம் பாலாவின் கவனத்திற்கு தெரியவர அவர் சென்னை கமிஷனரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், இது முற்றிலும் போலியானது. யாரும் நம்பி ஏமாற வேண்டாம். என்னுடைய திரைப்படங்களில் நடிப்பவர்களுக்கான தேர்வை உதவி இயக்குநர்கள் மற்றும் மேலாளர்கள் மட்டுமே நேரடியாக தொடர்புகொண்டு அணுகுவார்கள். எனவே திரைப்படங்களில் குறிப்பாக என்னுடைய படங்களில் பணியாற்ற விரும்புபவர்கள் இதுபோன்ற போலியான கணக்குளில் இருந்து வரும் செய்திகளை நம்பி ஏமாறவேண்டாம். விழிப்புணர்வுடன் இருங்கள்” என கூறியதோடு சம்மந்தப்பட்ட அந்த மர்ம நபர் யார் என்று கண்டுபிடித்து தக்க தண்டை கொடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.