ஆளுநர் ஆர்என் ரவி முடிவுக்கு எதிர்ப்பு… அரசிதழில் அதிரடி காட்டிய தமிழக அரசு!!!

Author: Udayachandran RadhaKrishnan
20 September 2023, 7:30 pm

ஆளுநர் ஆர்என் ரவி முடிவுக்கு எதிர்ப்பு… அரசிதழில் அதிரடி காட்டிய தமிழக அரசு!!!

சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கு துணைவேந்தர்களை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

3 பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமனம் செய்ய கமிட்டி அமைத்து ஆளுநர் ஆர்என் ரவி உத்தரவிட்டார். ஒவ்வொரு பல்கலைக்கழகங்களுக்கும் தலா நான்கு உறுப்பினர்களை கொண்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதில் முதல் முறையாக யுஜிசியின் பிரதிநிதி துணை வேந்தர்கள் நியமன தேர்வு குழுவில் இடம்பெற்றுள்ளனர். பல்கலைக்கழக துணைவேந்தர்களை தேர்வு செய்யும் தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினர்கள் கட்டாயம் இல்லை என தமிழ்நாடு அரசு நேற்று ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது தமிழக அரசின் எதிர்ப்பை மீறி, தேர்வு குழுவில் யுஜிசியின் பிரதிநிதியை நியமித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

இந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்காக துணைவேந்தர் பணியிடங்களுக்கு மூவரது பெயரை பரிந்துரைக்க வேண்டும் என்று ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில்தான் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்ந்தெடுக்க, தமிழ்நாடு ஆளுநர் ரவி அமைத்த குழுவை மாற்றி அமைத்து தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. துணைவேந்தர் தேர்வுக்கு ஏற்கனவே ஆளுநர் ரவி குழு அமைத்த நிலையில், தற்போது புதிய குழு அமைத்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

  • Ajith racing and movies நடிப்பிற்கு bye bye …அஜித் எடுத்த திடீர் முடிவு..அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
  • Views: - 357

    0

    0