குழந்தையை இடுப்பில் கட்டி வந்த தாய்.. இதய கோளாறுடன் பேத்தி.. பரிதவித்த மூதாட்டி : விபரத்தை கேட்டு உடனடி ஆக்ஷன் எடுத்த உதயநிதி!!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2023, 9:49 am

குழந்தையை இடுப்பில் கட்டி மகளிர் உரிமைத் தொகை வாங்க வந்த பெண்.. விபரத்தை கேட்டு உடனடி ஆக்ஷன் எடுத்த உதயநிதி!!

தமிழகத்தில் உள்ள இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை தமிழக முதல்வர் கடந்த 15ஆம் தேதி துவங்கி வைத்த நிலையில், மதுரை பாண்டி கோவில் பகுதியில் இருக்கக்கூடிய தனியார் திருமண மண்டபத்தில் இன்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு 500 மகளிருக்கு பண பரிவர்த்தன அட்டையை வழங்கினார்.

அப்போது அவரிடம் பணம் பரிவர்த்தன அட்டையை பெறுவதற்காக வந்த பயனாளி பெண்களில் ஒருவர் கையில் குழந்தையுடன் வந்த நிலையில் அவருடைய விபரங்களை கேட்டபோது அவர் மதுரை சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பதும் தனக்கு பிறந்த குழந்தை எடை குறைவாக இருப்பதினால் அவரை கையில் சுமந்து வந்துள்ளதாகவும் மருத்துவ உதவி இல்லாததால் அவருடைய உடல் நிலையை பராமரிக்க முடியவில்லை என்று தெரிவிக்க, உடனடியாக அருகில் இருந்த மாவட்ட ஆட்சியர் சங்கீதா அவர்களை அழைத்து பண பரிவர்த்தனை அட்டை பெற வந்த பெண்மணிக்கு உரிய முதலுதவி மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தினார்.

மேலும் உதவி ஆட்சியரிடத்தில் அந்த பெண்மணிக்கு தேவைப்படக்கூடிய அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து பார்வை குறைபாடுள்ள மாற்றுத் திறனாளி பெண் ஒருவர் தனது பேத்தியுடன் வருகை தந்த போது, பள்ளிக்கு செல்ல வேண்டிய நேரத்தில் இவ்வாறு பாட்டியுடன் வருவதை பார்த்து அந்த குழந்தையுடன் கேட்டபோது அதற்கு அவரது பாட்டி காவிரியிடம் ஒன்பது வயது குழந்தையான திவ்யா ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை எனக் கேட்டபோது தனது மகள்களை பேட்டி என்றும் திவ்யாவிற்கு சிறு வயது முதலே இருதய கோளாறு இருந்து வருவதால் பள்ளியில் சேர்க்க இயலாத ஒரு நிலையிலும் மேலும் தான் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆக இருப்பதால் தனக்கு உதவியாக இருந்து வருகிறார் என்றும் தெரிவித்த உடன் அருகில் இருந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் துணை ஆட்சியரை அழைத்து அவர்களுடைய நிலை குறித்து மேலும் கேட்டறிந்தார் தொடர்ந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து அந்த சிறுமியை பள்ளிக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்

மகளிர் உரிமம் தொகைக்கான வங்கி பரிவர்த்தன அட்டையை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவருடைய இந்த செயல் அங்கு வந்திருப்பதிலேயே நெழ்ச்சியை ஏற்பட செய்தது.

அரசு விழாக்களில் கலந்து கொண்டு போட்டோக்கு மட்டுமே போஸ் கொடுத்துச் செல்லும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் ஏழைப் பெண்களின் நிலையை அறிந்து உடனடியாக அவர்களுக்கு உதவ முன்வந்த அமைச்சர் உதயநிதியின் செயல் பாராட்டுதலுக்குரியது

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 391

    0

    0