பன்னீர் சோடா பாட்டிலுக்குள் மிதந்த பஸ் டிக்கெட்… அதிர்ச்சியில் வாடிக்கையாளர் ; நடவடிக்கை பாயுமா..?

Author: Babu Lakshmanan
21 September 2023, 8:48 pm

தருமபுரியில் தண்ணீர் தாகத்திற்கு பன்னீர் சோடா வாங்கி குடிக்க முற்பட்ட பொழுது, பாட்டிலுக்குள் பஸ் டிக்கெட் மற்றும் எறும்பு மிதந்து இருந்ததால் அதிர்ச்சியடைந்தார்.

தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பின்புறம் உள்ள ஒரு கடையில் வெயிலின் காரணமாக, அந்த பகுதியை கபில் என்பவர் பைக்கில் கடந்து செல்லும் பொழுது, தாகத்தின் காரணமாக அங்கிருந்த ஒரு கடையில் பன்னீர் சோடா ஒன்றை வாங்கியுள்ளார்.

பின்னர், வீட்டிற்கு வந்த பிறகு சோடா குடிக்க முற்பட்ட பொழுது பாட்டிலுக்குள் பஸ் டிக்கெட் மற்றும் எறும்பு மிதந்து உள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும், பன்னீர் சோடா பாட்டிலை குலுக்கி பார்த்த பொழுது மிகவும் கலங்கலாக இருந்துள்ளதை பார்த்து மேலும் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து கபில் கூறும் பொழுது, “நல்ல வேளை இதை நான் குடிக்கவில்லை. ஆனால் சிறுவர்கள் யாராவது வாங்கி இதனை குடித்து இருந்தால் பெரும் பாதிப்புகளை சந்தித்து இருப்பார்கள். ஆகவே, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைகளில் தர சோதனை மேற்கொள்ளும் பொழுது, உணவு பொருட்களை மட்டுமே ஆய்வு செய்கின்றனர்.

https://player.vimeo.com/video/866819456?badge=0&autopause=0&player_id=0&app_id=58479

பேக்கிங் பொருட்கள் குளிர்பானங்களை ஆய்வு செய்ய தவறி விடுகின்றனர். அவற்றையும் இனி வரும் காலங்களில் கடைகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும், என வேண்டுகோள் விடுத்தார்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!