குப்பைகளை 5 மண்டலங்களாக பிரித்து கொட்ட வேண்டும் ; வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய மீட்புக்குழு தீர்மானம்

Author: Babu Lakshmanan
21 September 2023, 9:54 pm

கோவையில் அதிமுக ஆட்சியின் போது பல கோடி செலவில் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்ட திட்டமிடப்பட்டது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட இந்தப் பேருந்து நிலையத்திற்கான கட்டுமானப் பணிகளும் தொடங்கப்பட்டது. 40 முதல் 50 சதவீதப் பணிகள் நிறைவடைந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததால், பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

அதோடு, இந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பைபாஸ் சாலை அருகே அமைக்க திட்டமிடப்பட்டதாகவும் தகவல் வெளியாகி வந்தன.

இந்த நிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை மீட்டெடுக்கும் விதமாக, அரசியல் சார்பற்ற, ‘வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய மீட்பு குழு’ என்ற அமைப்பை அப்பகுதி மக்கள் உருவாக்கியுள்ளனர். வெள்ளலூர் பேருந்து கட்டுமான பணிகளை விரைந்து துவக்க தமிழக அரசிடம் வலியுறுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.

அந்த வகையில், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய மீட்பு குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், குப்பைகளை சேகரிப்பதில் கோவை மாநகராட்சி வார்டுகளை 5 மண்டலங்களாக பிரிக்க வேண்டும், ஒரு மண்டல குப்பைகளை மட்டும் வெள்ளலூர் குப்பை கிடங்களில் கொட்ட அனுமதிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும், கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள குப்பைகளை வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டுவதால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், குடிநீர் சீர்கேடு மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உருவாகி வருவதாக தெரிவித்த ஒருங்கிணைப்பாளர்கள், துடியலூர் மற்றும சரவணப்பட்டியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை, அந்தந்தப் பகுதிகளிலேயே கொட்ட ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

https://player.vimeo.com/video/866842017?badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!