‘பயங்கரவாதிகளின் புகலிடமாக திகழும் கனடா’ ; இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கடும் விமர்சனம்!!

Author: Babu Lakshmanan
21 September 2023, 10:00 pm

காலிஸ்தான் தலைவர் கனடாவில் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா – கனடா நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இருநாடுகளும் அந்தந்த நாட்டுத் தூதரக அதிகாரிகளை வெளியேற்ற உத்தரவிட்டது. தொடர்ந்து, மோதல் போக்கு ஏற்பட்டு வரும் நிலையில், இந்திய அரசாங்கம் இந்த விஷயத்தை மிகுந்த கவனத்துடன் அணுக வேண்டும் என்றும், இந்திய அரசுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விளக்கம் அளித்தார்.

மேலும், பயங்கரவாத தாக்குதல்களின் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் இருக்கும் கனடா நாட்டினர் அதிக எச்சரிக்கையுடன் இருங்கள் என அறிக்கை வெளியிட்டு கனடா, இந்திய அரசாங்கத்தை கடும் கோபத்திற்கு ஆளாக்கியது. இதனிடையே, ‘கனடாவை விட்டு வெளியேறுமாறு அந்த நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த சூழலில், இந்தியாவுக்கு எதிராக வெறுப்புணர்வு பரப்பப்படுவதால் இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், கனடாவில் வசிக்கும் இந்திய மாணவர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. தொடர்ந்து, கனடா நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வர விரும்பும் அந்நாட்டு குடிமக்களுக்கு விசாவை, இந்தியா தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்தியா – கனடா இடையே மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், மத்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, “பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், வன்முறை அமைப்புகளின் புகலிடமாக கனடா திகழ்கிறது. ஹர்தீப் சிங், நிஜ்ஜார் வழக்கில் எந்த தகவலையும் இந்தியாவுக்கு கனடா வழங்கவில்லை. இந்தியாவுக்கு எதிராகக் குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது கனடா அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. கனடா தனது நற்பெயரை காத்துக்கொள்ள வேண்டும். குற்றவாளிகளின் புகலிடமாக கனடா உள்ளது என்ற கெட்ட பெயர் ஏற்படாமல் அந்நாட்டு அரசு செயல்பட வேண்டும்,” என தெரிவித்துள்ளார்.

  • Allu Arjun arrest and controversy பூகம்பமாய் வெடிக்கும் அல்லு அர்ஜுன் பிரச்சனை…வீட்டின் முன்பு கலவரம்…கண்டுகொள்ளாத போலீஸார்..!
  • Views: - 493

    0

    0