சமயம் பார்த்து மாமனாரை பழி வாங்கிய ஜோதிகா… மனைவியின் பேச்சுக்கு அடங்கிப்போகும் சூர்யா!

Author: Shree
22 September 2023, 11:16 am

புஷ் புஷ் நடிகையாக கொழுக் மொழுக் அழகியாக அக்கட தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தவர் நடிகை ஜோதிகா. இந்தி சினிமாவில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த ஜோதிகா வாலி படத்தில் காமியோ ரோலில் நடித்து அறிமுகமானார் .

முதல் படத்திலே நல்ல அறிமுகத்தை பெற்ற அவர் தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, குஷி, பூவெல்லாம் உன் வாசம், பிரியமான தோழி, தூள், காக்க காக்க, மன்மதன், பேரழகன், சந்திரமுகி, சில்லுனு ஒரு காதல் இப்படி பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

காக்க காக்க படத்தில் நடித்த போது நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். சிவகுமாருக்கு தன் மகன் ஒரு நடிகையை திருமணம் செய்வதில் விருப்பமே இல்லையாம். தன் ஜாதியில் பெண் எடுத்து திருமணம் செய்யவேண்டும் என எண்ணியதாகவும் அது நடக்காததால் மிகவும் வருத்தப்பட்டதாக சிவகுமாரே பேட்டி ஒன்றில் கூட கூறியிருந்தார்.

அதன் பின்னர் தன்னுடைய இளைய மகன் கார்த்திக்கு தன் இஷ்டப்படி தன் சாதிக்கார பேனையே திருமணம் செய்துவைத்து நிம்மதி அடைந்தார். இதையெல்லாம் மனதில் வைத்து சரியான நேரம் பார்த்து பழிவாங்க எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஜோதிகா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

சரி போனால் போகட்டும் என விட்ட சிவகுமாருக்கு மீண்டும் பெரிய இடி கொடுத்தார் ஜோதிகா. ஆம், சூர்யாவை கூட்டிக்கொண்டு தான் பிறந்த மண்ணான மும்பையில் சென்று செட்டில் ஆகிவிட்டார். இதனால் சிவகுமார் செம கோபத்தில் இருக்கிறாராம். இருந்தாலும் அவரால் ஒண்ணுமே செய்யமுடியவில்லையாம். காரணம் சூர்யா ஜோதிகா பேச்சை தட்டாமல் அவர் சொல்வதே மந்திர வாக்காக நினைந்து இந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டிவருகிறார். அவரே பட்டு திருந்தினால் தான் வழி பிறக்கும் என்கிறார்களாம் சிவகுமார் வீட்டு உறவுகள்.

  • Who had SIX PACKS before Surya? சூர்யாவுக்கு முன்னாடி SIX PACKS வெச்சவன் எவன் இருக்கான்? அனல் பறந்த நடிகரின் பேச்சு!