‘அமைச்சர் முத்துச்சாமியை வரச்சொல்லு’.. வடிவேல் காமெடி பாணியில் போலீசாரிடம் போதை ஆசாமி அலப்பறை..!!

Author: Babu Lakshmanan
22 September 2023, 1:56 pm

‘நான் போவேன், இல்ல இங்கேயே மல்லாக்கா படுப்பேன்’ என வடிவேல் காமெடி பாணியில் ஈரோட்டில் போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட மது பிரியரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு காளை மாடு சிலை அருகில் மின்வாரிய ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. அப்போது. சூரம்பட்டி காவல்நிலையத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக நின்று கொண்டிருந்தனர். அந்த சமயம், தர்ணா போராட்டத்திற்காக போடப்பட்டிருந்த பந்தல் கூடம் முன்பாக, இருசக்கர வாகனத்தில் வந்த மதுப்பிரியர் ஒருவர், திடீரென ரகளையில் ஈடுபட தொடங்கினார்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மதுப்பிரியரை சமாதானப்படுத்தி அனுப்ப முயற்சி செய்தனர். இருப்பினும், மதுப்பிரியர், அங்கிருந்து செல்லாமல், நகைச்சுவை நடிகர் வடிவேல் பாணியில், நான் வண்டியை தள்ளிட்டு போவேன், இல்ல இங்கேயே மல்லாக்க படுத்து கிடப்பேன்,” எனக்கூறி போலீசாரிடம் தொடர்ந்தது ரகளையில் ஈடுபட்டர்.

மேலும் காலையில் மதுக்கடை திறப்பதற்கு முன்னாதாகவே மது அருந்தி வந்த அந்த மதுப்பிரியர், மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துச்சாமி இங்கு வர வேண்டும் எனக்கூறியது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. சுமார் 30 நிமிடமாக படாது பாடு படுத்திய அந்த மதுப்பிரியரால் பொறுமையிழந்த போலீசார், அவரை குண்டுக்கட்டாக தூக்கி ஆட்டோ மூலமாக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

https://player.vimeo.com/video/867079089?badge=0&autopause=0&player_id=0&app_id=58479

போதை ஆசாமியின் ரகளை காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • goundamani does not eat in home said by bayilvan கவுண்டமணியிடம் இருந்த மர்மம்? அந்த சாப்பாட்டுல என்ன இருக்கு? பின்னணியை உடைத்த பிரபலம்…