இயக்குனருடன் ரகசிய திருமணம் செய்துக்கொண்டேனா? ட்விட்டரில் கொந்தளித்த சாய்பல்லவி!

Author: Shree
22 September 2023, 7:26 pm

நடன கலைஞராக டிவி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. பின்னர், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக இந்திய திரையுலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து, நிறைய பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. தமிழில் NGK, மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

sai pallavi

ஹீரோயினுக்கு ஏத்த எந்த வரையறையும் இல்லாமல் வித்தவுட் மேக்கப்பில் நேச்சுரலாக வலம் வருவது தான் இவரின் தனி அழகு . இவர் சமீப காலமாக, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார் நடிகை சாய் பல்லவி. அழகான தோற்றம் கொண்டு ரசிகர்களை கவர்ந்த இவர், கிளாமரான காட்சிகளில் நடிக்க தடை போட்டு இருக்கிறார். படுக்கை அறை காட்சிகள், முத்த காட்சிகள் இருந்தால் அந்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிடுகிறார்.

இதனிடையே நடிகை சாய் பல்லவி இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியை திருமணம் செய்து கொண்டதாக இணையதளத்தில் புகைப்படத்துடன் செய்திகள் வெளியானது. ஆனால், அது சிவகார்த்திகேயனின் 21வது படத்தின் பூஜை என்றும், அப்படத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியது. இந்த வதந்தி செய்தி கேட்டு செம கடுப்பான சாய் பல்லவி தற்போது இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அந்த பதிவில்

sai pallavi - updatenews360 j

“உண்மையில் சொல்லப்போனால் நான் வதந்திகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால் அது குடும்ப நண்பர்களை உள்ளடக்கியிருந்தால், நான் பேச வேண்டும். எனது படத்தின் பூஜை விழாவில் இருந்து ஒரு படம் வேண்டுமென்றே crop செய்யப்பட்டு அதனை பணம் கொடுத்து கேவலமான நோக்கத்தோடு பரப்பப்பட்டது.
எனது வேலையில் மகிழ்ச்சியான அறிவிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும்போது, இதுபோன்ற வேலையின்மைச் செயல்கள் அனைத்திற்கும் விளக்கமளிப்பது வருத்தமளிக்கிறது. இது போன்று மனசங்கடத்தை ஏற்படுத்துவது முற்றிலும் கேவலமானது! என பதிலடி கொடுத்துள்ளார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 465

    0

    0