வேலைக்கு செல்லாத கணவர்.. 24 மணி நேரமும் குடி : மூச்சுத் திணற திணற வந்த சத்தம் : திருவள்ளூர் அருகே பயங்கரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 September 2023, 7:26 pm

வேலைக்கு செல்லாத கணவர்.. 24 மணி நேரமும் குடி : மூச்சுத் திணற திணற வந்த சத்தம் : திருவள்ளூர் அருகே பயங்கரம்!!

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த வாணியன் சத்திரம் கிராமத்தில் வசித்து வந்தவர் ரமேஷ் (வயது30). இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையான நிலையில் கடந்த சேர்ந்த 11-ம் தேதி மர்மமான முறையில் இவரது வீட்டில் உள்ள படுக்கை அறையில் உயிரிழந்து கிடந்தார்.

இது தொடர்பாக வெங்கல் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து பிரேத பரிசோதனையில் ரமேஷ் மூச்சு திணறி உயிரிழந்ததற்கான தடயங்கள் இருந்தது. இதனால் ரமேஷ் மனைவி தங்கலட்சுமி வயது(27) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை பிடித்து போலீசார் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனது கணவன் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டதால் இதில் ஆத்திரம் அடைந்த அவர் தனது கணவரை முகத்தில் தலையணை வைத்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

இதனை தொடர்ந்து போலீசார் தங்கலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் முதல் நிலை குற்றவியல் நீதிமன்றம் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்தனர்.

அவரது உத்தரவின் பேரில் போலீசார் புழல் பெண்கள் சிறையில் அடைத்தனர். மனைவியே தனது கணவனை கொலை செய்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?