கொக்கு தலையில் வெண்ணெய் வைப்பது போல… மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து பகீர் கிளப்பிய திமுக எம்பி திருச்சி சிவா!!
Author: Udayachandran RadhaKrishnan23 September 2023, 9:46 pm
கொக்கு தலையில் வெண்ணெய் வைப்பது போல… மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து பகீர் கிளப்பிய திமுக எம்பி திருச்சி சிவா!!
திருச்சி காஜாமலை பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் அரசு கலை மற்றும் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் 20-ம் ஆண்டு சங்கமம் சந்திப்பு நிகழ்ச்சி முப்பெரும் விழாவாக நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
காலை தொடங்கும் இந்த விழாவுக்கு சங்கத்தின் புரவலரும், மாநிலங்களவை எம்.பி.யுமான திருச்சி சிவா தலைமை வகிக்கிறார்.
நடிகை லெட்சுமி சிவச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேச உள்ளார்.
தொடர்ந்து இந்த நிகழ்வு விழா ஏற்பாடு குறித்து பார்வையிட்ட எம்.பி. சிவா அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்… தந்தை பெரியார் கல்லூரி திருச்சியில் 60ஆண்டை தொடர்கின்றது.
ஏழை எளிய மாணவர்கள், கிராம புறத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு கல்வி பயில அரசு கல்லூரி வேண்டுமென்று குரல் எழுந்த போது
தந்தை பெரியார் அவர்கள் போதுமான பணத்தையும் இடத்தையும் கொடுத்து தொடங்கப்பட்ட கல்லூரி இது, இங்கு நான் 1970 ல் கல்லூரி படிப்பை துவங்கினேன், என்னைப் போன்று இங்கு பலர் படித்து பெரியாளாகியுள்ளனர் என தெரிவித்தார்,
மேலும் தந்தை பெரியார் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் எங்கிருந்தாலும் நாளை ஞாயிற்றுக்கிழமை 24ஆம் தேதி வர வேண்டும் என விரும்புகிறோம், அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே என நாம் சந்திப்போம் என அழைப்பாக தெரிவித்துக் கொள்கிறேன் என கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்ட தொடரில் மகளிர்க்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது , நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் 33சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
நாங்கள் உட்பட அனைத்து கட்சிகளும் ஆதரித்துள்ளனர், ஆனால் இந்த சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வராது என தெரிவித்தார். வழக்கமான முறையில் மசோதா நிறைவேற்றாமல் இந்த முறை ரைடர் என்ற இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் அவ்வளவு எளிதானது அல்ல எனவும் 140 கோடி மக்களிடம் கணக்கெடுப்பு நடத்தி அதற்குப் பின்னால் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை பிரிவினை செய்து அறிவிப்பார்கள் என்பது கொக்கு தலையில் வெண்ணெய் வைப்பது போன்று என கூறினார்.