அதிமுக நிர்வாகிகள் டெல்லிக்கு சென்றது கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அல்ல : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

Author: Udayachandran RadhaKrishnan
24 September 2023, 7:46 pm

அதிமுக நிர்வாகிகள் டெல்லிக்கு சென்றது கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அல்ல : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்பதில் மாற்றம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “டெல்லி சென்ற அதிமுக நிர்வாகிகள் மத்திய அமைச்சரிடம் கட்சி சார்ந்த விஷயங்கள் குறித்து எதுவும் பேசவில்லை.” “மக்களின் பிரச்சினைகளுக்காகவே மத்திய அமைச்சரை அதிமுக நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்பதில் மாற்றம் இல்லை. தற்போதுவரை கடந்த 18ம் தேதி எடுத்த முடிவில் நிலையாக இருக்கிறோம். நாளை நடக்கும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்.”

“மடியில் கனமிருந்தால்தான் வழியில் பயம் இருக்கும் இதை பலமுறை சொல்லியிருக்கிறேன். இந்த பூச்சாண்டி வேலைகளுக்கெல்லாம் பயப்படுகிற இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக இயக்கம் இல்லை. 1972 முதல் அம்மாவின் மீது வழக்கு, முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு என பல சோதனைகளை தாண்டி வந்த இயக்கம் அதிமுக.”

“இப்படி பல சோதனைகளை கண்டும் கட்சியில் தோய்வு இல்லை. எங்களுடைய கடமையில் இருந்து நாங்கள் என்றைக்கும் பின்வாங்குவதில்லை. மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் கழகம் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்.” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?