என்ன இது உல்டாவா இருக்கு…. திருமணத்திற்கு பின்னர் படு ஒல்லியாகி அடையாளம் தெரியாமல் போன ஹன்சிகா!

Author: Shree
26 September 2023, 9:37 am

நடிகை ஹன்சிகா ஆரம்பத்தில் பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் நடிகை ஹன்சிகா பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். முன்னதாக, 2011-ம் ஆண்டு நடிகை ஹன்சிகா விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். மேலும், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தி உள்ளார்.

இதனிடையே அண்மையில் தொழிலதிபரான சோஹைல் கதூரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். கணவர் சோஹைல் கதூரியா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என பரபரப்பாக பேசப்பட்டது. அதுவும் ஹன்சிகாவின் நெருங்கிய தோழியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு விவாகரத்து செய்ததால் ஹன்சிகா தான் அவர்களை பிரித்துவிட்டு திருமணம் செய்துக்கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தது.

திருமணத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வரும் ஹன்சிகா பார்ட்னர் என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகர் ஆதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது ஹன்சிகா திருமணத்திற்கு பின்னர் ஆள் அடையாளமே தெரியாமல் படு ஒல்லியாக மாறிவிட்டார். அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் பார்த்து ரசிகர்கள் அட நம்ம ஹன்சிகாவா இது? என செம ஷாக் ஆகிவிட்டார்கள்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?