சினேகா மீது அப்படி ஒரு காதல்… பித்து பிடித்து அலைந்த பிரபல நடிகர்கள் – பிளாஷ்பேக் சம்பவங்கள்..!
Author: Vignesh26 September 2023, 3:45 pm
2000ம் காலகட்டத்தில் ஓஹோஹோன்னு புகழ் பாராட்டப்பட்ட நடிகையாக சினேகா தென்னிந்திய சினிமாவில் வலம் வந்தார். 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள் உருவாகினர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.
இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது.
இந்நிலையில், சினேகாவின் ஆரம்ப கால வாழ்க்கையை சற்று அலசி பார்த்தால் மோசமாகத்தான் உள்ளது. பல நடிகர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் காதல் வலையில் சிக்கியும், பல்வேறு கிசுகிசுக்களிலும், அடிபட்டு வந்தவர் தான் சினேகா. அப்படி நடிகை சினேகா பிரபல ஹீரோக்களுடன் டேட்டிங் சென்ற லிஸ்ட் இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆயுதம், விரும்புகிறேன் போன்ற படங்களில் நடித்து பிரசாந்துடன் ஜோடி போட்டு பக்கா கெமிஸ்ட்ரியை உருவாக்கினார் சினேகா. இருவரும் சேர்ந்து டேட்டிங் சென்ற நிலையில், சில விஷயங்கள் ஒர்க் அவுட் ஆகவில்லை என்று புரிந்து விட்டனர்.
இதனை அடுத்து என்னவளே, பார்த்தாலே பரவசம் போன்ற படங்களில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவரை சினேகா டேட்டிங் செய்து வந்தநிலையில், திருமணம் வரை சென்று இவர்களும் பிரிந்து விட்டார்கள்.
நடிகர் ஷாமுக்கு ஜோடியாக நடித்திருந்த சினேகா. ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, படத்தில் ஷாம் உதட்டை கடித்து ரொமான்ஸ் செய்திருப்பார். இந்த சம்பவம் அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால், அந்த படம் ஓடவே ஓடாமல் பயங்கரமாக அடிவாங்கி மொக்கை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
அன்றைய காலகட்டத்தில் நடிகைகளுடன் நெருக்கம் காட்டி ஓப்பனாக இருந்த நடிகர் அப்பாஸுடன் ஆனந்தம், பம்பல் கே சம்பந்தம் போன்ற படங்களில் நடித்ததோடு அவருடன் காதலில் இருந்ததாகவும், நெருக்கமாக இருந்ததாக கிசுகிசுக்கள் வெளியானது. பின்னர் அவரை கழட்டிவிட்டு நடிகர் பிரசன்னா பக்கம் சென்று அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.