தயாரிப்பாளராக களமிறங்கும் இயக்குனர் நெல்சன்.. ஹீரோ, ஹீரோயின் இவர்களா.. சூப்பர் ஜோடி தான்..!

Author: Vignesh
26 September 2023, 2:30 pm

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்திற்கு முன்னர் நெல்சன் கோலமாவு கோகிலா, பீஸ்ட் , டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியிருந்தார். சூப்பர் ஸ்டார் வைத்து படம் எடுப்பதால் எல்லோரது பார்வையும் நெல்சன் மீதே இருந்தது.

இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். பான் இந்தியா படமாக வெளியாகி இப்படம் மாபெரும் வெற்றி பெற்றுவிட்டது.

இதனிடையே, ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் புதிய படத்தை எடுக்க முடிவு செய்துள்ளார். ஆனால், இயக்குனராக அல்ல தயாரிப்பாளராக முதன் முறையாக நெல்சன் களமிறங்கி உள்ளார். இந்த படத்தை அவருடைய துணை இயக்குனர் சிவபாலன் என்பவர் இயக்க உள்ளார்.

kavin anirudh-updatenews360

நெல்சன் எப்படி தன்னுடைய படங்களுக்கு அனிருத்தை இசை அமைக்க வைக்கிறாரோ அதேபோல் நெல்சன் தயாரிப்பு சிவபாலன் இயக்கும் படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்க போகிறார். இந்நிலையில், இந்த படத்தின் ஹீரோவாக கவின் ஹீரோயினாக பிரியங்கா மேகனும் நடிக்க உள்ளதாகவும், முதல் முறையாக இந்த ஜோடி வெள்ளி துறையில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்