அதிமுகவுக்கு கூடும் பலம்… திமுக கூட்டணியில் பிளவு? நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் ரியாக்ஷன்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 September 2023, 2:43 pm

அதிமுகவுக்கு கூடும் பலம்… திமுக கூட்டணியில் பிளவு? நிருபர்கள் எழுப்பிய கேள்விக்க அமைச்சர் துரைமுருகன் ரியாக்ஷன்!!

கர்நாடகாவில் குடிக்க தண்ணீர் இல்லை எனக்கூறி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க அங்குள்ள விவசாய, கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே தான் காவிரி நீர் மேலாண்மை ஆணையம், உச்சநீதிமன்றம் தீர்ப்பை மீற முடியாமல் கர்நாடகா அரசு தமிழ்நாட்டுக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்து விட்டுள்ளது.

இதனை கண்டித்து கேஆர்எஸ் அணை அமைந்துள்ள மண்டியா மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை பந்த் நடந்தது. இதனை தொடர்ந்து இன்று பெங்களூரில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக ஜல ரக்சனா சமீதி(கர்நாடகா நீர் பாதுகாப்பு குழு) சார்பில் இந்த பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை பந்த் நடக்கிறது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள நீரை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக துரைமுருகன் கூறியதாவது:- உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஒவ்வொருவரும் ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் நடத்த ஆரம்பித்தால், உச்சநீதிமன்றத்திற்கு என்று கொடுக்கப்பட்ட தனித்த அதிகாரம் என்ன ஆகும் என்பதை அரசயலில் தெளிவு செய்தவர்கள் உணர வேண்டும்.

இதேபோல் உச்ச நீதிமன்றமும் தங்களுடைய கருத்துக்கு, நீதியில் எதிர்ப்பு வருகிறது என்றால் அதை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்பதையும் தீர்மானிக்க வேண்டும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி 13.09.2023 முதல் 15 நாட்களுக்கு 5000 கன அடி நீர் தரவேண்டும். நாளையோடு அந்த 15 நாள் கெடு முடிகிறது. இடை இடையே கர்நாடகாவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றாலும், அவர்கள் தர வேண்டிய தண்ணீரை தந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் குறைவாக நீர் திறந்தாலும், இன்று காலை நிலவரப்படி 7 ஆயிரம் கனஅடி நீர் கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்படுகிறது.

உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல் கணக்கு படி பார்த்தால் இன்னும் 11 ஆயிரம் கன அடி நீர் தரவேண்டியது இருக்கு.. இது நாளைக்குள் தமிழகத்திற்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம்.

காவிரி நீர் ஒழுங்காற்று கமிட்டியின் அடுத்த கூட்டம் இன்று நடைபெறுகிறது. ஆன்லைனில் நடைபெறும் இந்த கூட்டத்தில் நமக்கு தேவையான 12,500 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படும்.

அதிமுக பாஜக கூட்டணி முறிவு குறித்து பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், “அதிமுக என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பதை அந்த கட்சி தலைவர்கள் உணர வேண்டும். இது அதிமுகவின் தனிப்பட்ட விவகாரம். அதில் தலையிட்டு கருத்து சொல்ல விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.

இதே போல திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் அதிமுகவுக்கு தாவ உள்ளதாக தகவல் வருகிறேத என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஊடகம் எது வேண்டுமானாலும் சொல்லும் என துரைமுருகன் கூறினார்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 303

    0

    0