சுத்தி சுத்தி அடிக்கும் பிரச்சனை வசூலில் சறுக்க போகும் லியோ – வேதனையில் விஜய்!
Author: Shree27 September 2023, 6:17 pm
தமிழ் சினிமாவின் முன்னணி டாப் ஹீரோ என்ற அந்தஸ்தில் இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா. கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரும் வரும் வித்தியாசமான, மரண மாஸாக கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்பதால் தான். அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரித்தது.
இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்வதாக அதன் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது விஜய் ரசிகர்களுடைய பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடக்கும் என சொல்லப்பட்ட நிலையில் நடிகர் விஜய் வெளிநாடுகளில் நடத்துவதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும், அதனால் தமிழகத்தில் தான் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெறும் என படத்தின் தயாரிப்பாளர் லலித் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
தற்போது, லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தவில்லை என தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ அறிவித்துள்ளது. அதாவது, பாதுகாப்பு காரணங்கள் மற்றும் விழாவிற்கான கோரிக்கைகள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ஆடியோ வெளியிட்டை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். எனினும், ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அடிக்கடி அப்டேட்டை வெளியிடுவோம் என்று தெரிவித்துள்ளார். மேலும், ஆடியோ வெளியீடு நடக்காததற்கு காரணம் பலர் நினைப்பது போல் இது அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களாலோ அல்ல என்று இவ்வாறு x தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
ஆடியோ லான்ச் ரத்திற்கு காரணம் இது தான் என்று செய்திகள் சமூகவலைதங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, சில நாட்களுக்கு முன்னர் பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் “நடிகர் விஜய்யின் லியோ படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டும் என்று ஆளும்கட்சி தரப்பு நடிகர் விஜய் மிரட்டி வருவதாக பதிவிட்டு பரபரப்பை கிளப்பியிருந்தார்.
இப்படி ஒரு நிலையில் லியோ படத்தின் ஆடியோ லான்ச் ரத்தாகியுள்ளது. எனவே சவுக்கு ஷங்கர் சொன்னது அனைத்தும் உண்மை தான் போல உதயநிதியை பார்த்து விஜய் பயந்து இப்படி ஒரு காரியத்தை செய்துள்ளாரோ?என சந்தேகத்தை வரவைக்கிறது. சினிமாவில் கூட அரசியல் தாண்டவமாடுகிறது. சினிமா அரசியலை சமாளிக்கவே திணறும் விஜய் எப்படி முழு நேர அரசியலில் ஈடுபடமுடியும் என பலர் விமர்சித்துள்ளனர்.
எனவே லியோ படம் ரீஸுக்கு முன்னரே ஏகப்பட்ட பிரச்சனைகளை அடுத்தடுத்து சந்தித்து வருவதால் இப்படம் வசூல் ரீதியாக சறுக்கலை சந்தித்து விடுமோ என விநியோகிஸ்தர்கள் அஞ்சியுள்ளனர். ஆனால், விஜய்யின் படங்கள் சர்ச்சையில் சிக்கினால் அந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்துவிடும் என்பது தான் எல்லோரது நம்பிக்கையாக உள்ளது. எனவே சர்ச்சைகள் மூலம் லியோ படத்திற்கு பப்ளிசிட்டி கிடைத்து வருகிறது.