அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… இன்று ஒரே நாளில் ரூ.560 குறைவு… 4 நாட்களில் மட்டும் ரூ.888 சரிவு…!!!

Author: Babu Lakshmanan
28 September 2023, 11:34 am

பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும்போது, தங்கத்தின் விலை உயருகிறது. அதற்கு காரணம், பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள், அதை மாற்றி தங்கத்தில் முதலீடு செய்வதுதான். உதாரணமாக கடந்த ஆண்டு ரஷியா – உக்ரைன் போர் நடந்தபோது, பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது.

அதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலித்தது. அதாவது தங்கத்தின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்தது. ஒரு பவுன் (8 கிராம்) தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை கடந்து, இல்லத்தரசிகளை அதிர வைத்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. கடந்த ஜனவரி 1-ந்தேதி, ரூ.41 ஆயிரத்தை கடந்த ஒரு பவுன் தங்கம் விலை, தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.

ரூ.45 ஆயிரம், ரூ.46 ஆயிரம் என்று புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை (ஒரு பவுன்) உயர்ந்தது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில், தங்கத்திற்கான இறக்குமதி வரியும் உயர்த்தப்பட்டது. இதனால், தங்கம் விலை மேலும் உயரும் வாய்ப்பு இருந்தது. இருப்பினும், தங்கம் விலை உயர்ந்தும், சரிந்தும் காணப்பட்டது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை பவுன் ரூ.43,280 ஆக குறைந்தது. ஒரேநாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.560 குறைந்து உள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.888 குறைந்துள்ளது. நேற்று ஒருகிராம் தங்கம் ரூ.5480-க்கு விற்கப்பட்டது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.5410-க்கு விற்கப்படுகிறது. 4 நாட்களில் கிராமுக்கு ரூ.111 குறைந்துள்ளது.

இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்து உள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.77-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.76.50-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.76500-க்கு விற்பனையாகிறது.

 

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!