அசுர வேகத்தில் சீறிப் பாய்ந்து வந்த கார்… பைக்கில் சாலையை கடக்க முயன்றவர்களுக்கு நேர்ந்த கதி ; அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!

Author: Babu Lakshmanan
29 September 2023, 5:01 pm

மதுரை வலையங்குளம் பகுதியில் சாலையை கடக்க முயன்ற டூவிலரை இடித்து தூக்கி வீசிய காரின் CCTV காட்சிகள் வெளியாகி உள்ளது.

மதுரை வலையங்குளம் நெடுஞ்சாலை பகுதியில் நெடுமதுரையை சேர்ந்த அருள்மணி (48) மற்றும் பெருங்குடியை சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகன் காசிநாதன் (70) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முற்பட்டுள்ளனர்.

அப்போது, எலியார்ப்பத்தி சுங்கச்சாவடியில் இருந்து அதிவேகமாக வந்த கார், இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது அதிவேகமாக மோதியதில் தூக்கி வீசப்பட்டனர். இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

https://player.vimeo.com/video/869513602?badge=0&autopause=0&player_id=0&app_id=58479

மேலும், சம்பவம் குறித்து பெருங்குடி போலீசார் காரை ஓட்டி வந்த நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில், தற்போது இந்த விபத்தின் CCTV காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • my scenes were deleted in goat movie said by black padi சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!