லியோ Audio Launch ரத்தானதால் மனஉளைச்சல்… எங்களுக்காக இதை மட்டும் பண்ணுங்க ; தமிழக அரசுக்கு விஜய் ரசிகர்கள் வைத்த கோரிக்கை.!!
Author: Babu Lakshmanan30 September 2023, 12:42 pm
லியோ ஆடியோ லான்ச் கேன்சல் ஆனதனால எங்களது ரசிகர்களுக்கு மிகுந்த மன உளைச்சலும், மன வருத்தத்தையும் ஏற்படுத்தியதாகவும், லியோ திரைப்படம் கள்ளக்குறிச்சி மாவட்ட திரையரங்குகளில் சிறப்பு காட்சி வெளியிட வேண்டுமென திரையரங்கு உரிமையாளர்களிடம் 200க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் மாவட்ட தலைவர் கோரிக்கை மனு அளித்தார்.
தமிழ் சினிமா திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் இளைய தளபதி விஜய். இவர் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் என்றாலே, அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும். அதில் முதல் விருந்தாக விஜய் நடித்து வெள்ளி திரைக்கு வரவிருக்கும் திரைப்படத்திற்கான ஆடியோ லான்ச் என்றாலே, விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பும், அரசியல் வட்டாரத்தில் விஜய் பேசும் பஞ்ச் வசனங்களும் பெரும் பிரபலமானவை அப்படியாக பேசப்பட்டு வந்தது.
தற்போது வருகிற அக்டோபர் 19ஆம் தேதி உலகமெங்கும் வெள்ளி திரையில் வரவிருக்கும் லியோ திரைப்படத்திற்கு பாதுகாப்பு நலன் கருதி, ஆடியோ லான்ச் கேன்சல் செய்யப்பட்டதாக லியோ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பானது, சினிமா திரைத்துறை மட்டுமில்லாமல், அவரது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது.
இதன் காரணமாக இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் திரையரங்குகளில் லியோ திரைப்படம் சிறப்பு காட்சிகள் வெளியிட வேண்டுமென விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் பரணி பாலாஜி விஜய் ரசிகர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் உடன் கள்ளக்குறிச்சியில் உள்ள திரையரங்குகளில் லியோ சிறப்பு காட்சி வெளியிட வேண்டுமென திரையரங்கு உரிமையாளர்களிடம் கோரிக்கை மனு அளித்தார்.
கோரிக்கை மனு அளித்த பின்பு செய்தியாளர் சந்தித்த அவர் கூறியதாவது :- தளபதி விஜய் அவர்களின் லியோ திரைப்படம் ஆடியோ லான்ச் தான் கேன்சலானதால் ரசிகர்கள் மத்தியில் மன உளைச்சலையும், மன வருத்தத்தையும் ஏற்படுத்தயுள்ளது. அதுவே தங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் அளிக்கிறது. எனவே, லியோ திரைப்படம் வருகிற 19ஆம் தேதி வெளிவரும் நிலையில், மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் வெளியிட வேண்டி திரையரங்கு உரிமையாளர்களிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
தொடர்ந்து பேசிய மாவட்ட தலைவர், இதுகுறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு இந்த சிறப்பு காட்சிகளை வழிவகை செய்யுமாறு அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேட்டி அளித்தார். இந்த நிகழ்வில் விஜய் மக்கள் இயக்கத்தினர் மற்றும் அவரது ரசிகர்கள், ரசிகைகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.