என் கணவர் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருக்கிறார்…. வேதனையை பகிர்ந்த சம்யுக்தா!
Author: Shree1 October 2023, 11:35 am
மாடல் அழகியாக இருந்த சம்யுக்தா பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டார் . அந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனார். இவர் யோகா கலைஞர், மாடல், தொழிலதிபர், நியூட்ரிசனிஸ்ட் என பல துறைகளில் பிரபலமான ஒருவர். பிக்பாஸ் முடிந்து சில மாத காலம் ஆனாலும் அதில் கலந்து கொண்ட பல பேருடன் தற்போதும் நட்பில் இருந்து வருகிறார். அதேபோல் இவருக்கு சில சினிமா பட வாய்ப்புகளும் வரத்துடங்கியுள்ளது.
விஜய்சேதுபதி நடித்த “துக்ளக் தர்பார்” படத்தில் கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார் . தமிழில் 2019ம் ஆண்டிலிருந்து தான் நடிக்க துடங்கியுள்ளார் ஆனால் 2018 ம் ஆண்டே மலையாள படங்களில் நடிக்கத் துடங்கிவிட்டார் நடிகை சம்யுத்தா சண்முகம் அதன் பின் கெளதம் கார்த்தியுடன் தமிழ் படத்தில் நடித்து நடித்தார். மேலும், விஜய் நடிப்பிலும் வெளியான வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து அடுத்தடுத்த படவாய்ப்புகளை தவறவிடாமல் நடித்து வரும் சம்யுக்தா எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக இருந்து வருவார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் யாருக்கும் இதுவரை சொல்லாத ஒரு விஷயத்தை கூறி வருந்தியுள்ளார்.
என்னுடைய கணவர் துபாயில் வேலை பார்த்து வந்தார். அவர் குடும்பத்திற்காக தான் தனியாக சென்று இப்படி கஷ்டப்படுகிறார் என நான் நினைத்திருந்தேன். ஆனால் அவர் அங்கு வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்தது பின்னர் தான் எனக்கு தெரியவந்தது. கொரோனா பரவல் காலக்கட்டத்தில் வேறொரு பெண்ணுடன் பழக ஆரம்பித்த அவர் 4 வருடங்களாக அவருடன் தான் இருந்து வருகிறார். இந்த விஷயத்தை அறிந்தவுடன் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
ஒருவர் மற்றொருவருடன் உறவில் இருக்கிறார் என்றால், உங்களிடம் மிகவும் ரூடாக நடந்து கொள்வார். என் கணவரும் அப்படித்தான் என்னிடம் நடந்துக்கொண்டார். இத்தனை வருடம் ஆகிவிட்டது. ஆனாலும் நான் இன்னும் அந்த பிரிவில் இருந்து நான் வெளிவரவில்லை என்று உருக்கமாக பேசினார் சம்யுக்தா. சம்யுக்தா தன் மகனுடன் சென்னையில் தனிமையில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.