குடிபோதையில் விபத்து.. 2 குழந்தைகளுடன் விபத்தில் சிக்கிய பாடகி சின்மயி..!
Author: Vignesh3 October 2023, 11:00 am
பிரபல பாடகியும், டப்பிங் கலைஞருமான சின்மயி, நடிகரும் இயக்குனருமான ராகுல் ரவீந்திரனை 2014-ல் திருமணம் செய்து கொண்டார். ரவீந்திரன் வணக்கம் சென்னை படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருப்பார்.
சமூக வலைதளங்களில் அடிக்கடி சர்ச்சையான கருத்துகளால் ரசிகர்களின் கவனம் ஈர்ப்பவர் தான் பாடகி சின்மயி. தனது முதல் பாடலிலேயே சிறந்த பாடகி என்ற முத்திரையை பதித்தார் சின்மயி, அடுத்தடுத்து பல படங்களில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் தொடர்ச்சியாக பாடல்களை பாடினார். இசைத் துறையில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளார்.
இதனிடையே, பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதாக குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து வைரமுத்துவிற்கு எதிரான கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் சின்மயி. பலமுறை வைரமுத்து குறித்து மோசமான கருத்துக்களை சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு அவரை திட்டியுள்ளார்.
இந்நிலையில், பாடகி சின்மய் நேற்று மாலை விபத்தில் சிக்கியதாக தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டு இருந்தார். அந்தப் பதிவில், தன் இரட்டைக் குழந்தைகளுடன் காரில் சென்றுக் கொண்டிருந்த போது மதுபோதையில் இருசக்கர வண்டி சாரதி ஒருவர் காரில் மோதியதாகவும் தற்போது தன் குழந்தைகள் நலமாக இருப்பதாகவும் பதிவிட்டு இருந்தார். மேலும், இந்த விபத்து பற்றி தான் காவல்துறைக்கு அறிவிக்கவில்லை எனவும், மது போதையில் வாகனம் ஓட்டாதீர்கள் எனவும் அப்பதிவில் தெரிவித்து உள்ளார்.
A piss drunk auto driver rammed against our car so badly that the frontal left side was smashed, at Abhiramapuram around 4 PM today.
— Chinmayi Sripaada (@Chinmayi) October 1, 2023
My kids were seated on the rear seat. And stepped out safe with our nanny. I didn’t realise the extent of damage from the photo as I returned…