ஆசை ஆசையாய் சாக்லேட்டை எடுக்க பிரிட்ஜை திறந்த சிறுமி… சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துயரமான சம்பவம்!!!
Author: Udayachandran RadhaKrishnan3 October 2023, 1:57 pm
ஆசை ஆசையாய் சாக்லேட்டை எடுக்க பிரிட்ஜை திறந்த சிறுமி… சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துயரமான சம்பவம்!!!
தெலுங்கானா நவிபேட் கிராமத்தைச் சேர்ந்த சம்யுக்தா, சேகர் தம்பதியின் 4 வயது மகள் ரித்திஷா விடுமுறைக்காக உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.
விடுமுறை முடிந்து வீடு திரும்புவதற்கு முன்னர் தந்தை சேகர் தனது மகளை ஷாப்பிங் செய்ய அங்கிருந்த சூப்பர் மார்க்கெட்டிற்கு அழைத்துச் சென்றார்.
அப்போது கடையில் உள்ள ஃப்ரிட்ஜில் இருந்த சாக்லேட்டை எடுக்க சிறுமி ரித்திஷா முயன்றுள்ளார். திடீரென எதிர்பாராதவிதமாக சிறுமி மீது மின்சாரம் பாய்ந்தது. இதையடுத்து தந்தை சேகர், உடனடியாக சிறுமியை காப்பாற்றினார்.
சிறுமியை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து நிஜாமாபாத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை அதற்குள் உயிரிழந்தது.
இதையடுத்து குழந்தையின் உறவினர்கள் சூப்பர் மார்க்கெட் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். நீதி கிடைக்கும் வரை இடத்தை விட்டு நகரமாட்டோம் என உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
ஆனால் உரிமையாளர் பதில் அளிக்காததால், சூப்பர் மார்க்கெட் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.